என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே பா.ம.க. கொடியை அறுத்து வீசிய மர்மநபர்கள்- போலீசார் விசாரணை
- புவனகிரி போலீஸ் சரகம் அழிச்சியகுடி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஏற்றப்பட்ட பா.ம.க. கொடியை மர்மநபர்கள் அறுத்து வீசி உள்ளனர்.
- வழக்குபதிவு செய்த போலீசார் பா.ம.க. கொடியை அறுத்து வீசிய மர்மநபர்கள் யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரி போலீஸ் சரகம் அழிச்சியகுடி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பா.ம.க. கொடி ஏற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு மர்மநபர்கள் அந்த கொடியை அறுத்து வீசி உள்ளனர். இன்று காலை அந்த வழியாக சென்ற பா.ம.க.வினர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பா.ம.க.வினர் திரண்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். கிழிக்கப்பட்ட பா.ம.க. கொடியை கைப்பற்றினர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் பா.ம.க. கொடியை அறுத்து வீசிய மர்மநபர்கள் யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






