என் மலர்
கடலூர்
- தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- பாரதீய ஜனதா கட்சியினர் தங்கள் நட்டு வைத்த கொடி கம்பத்தை அவர்களே அப்புறப்படுத்தினர்.
கடலூர்:
கடலூர் அருகே கோண்டூரில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை யொட்டி பாரதீய ஜனதா கட்சி சார்பாக புதிய கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்று விழா நடைபெற்றது. இதற்காக மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் மாநில நிர்வாகி சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் பெருமளவு ஒன்று கூடி இந்த பகுதியில் கொடி கம்பம் வைக்க கூடாது கொடிக்கம்பம் வைப்பதற்காக அனுமதி பெற்று வைத்துள்ளீர்களா என்று பா.ஜ.கவினரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் இருதரப்பினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த வாய் தகராறு முற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையின் போது பா.ஜ.க.வினர் உரிய முறையில் அனுமதி பெறாமல் கொடி கம்பத்தை வைத்தனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர். அதற்கு பா.ஜ.க.வினர் இன்று பிரதமர் மோடி பிறந்தநாள் என்பதால் கொடிக்கம்பம் வைத்ததாக கூறினர். இருதரப்பு பேச்சு வார்த்தையின் முடிவில் போலீசார் கொடிக்கம்பம் நடுவதற்கு உரிய முறையில் அனுமதி பெற்று வைக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து பாரதீய ஜனதா கட்சியினர் தங்கள் நட்டு வைத்த கொடி கம்பத்தை அவர்களே அப்புறப்படுத்தினர். இதனால் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சிவராமன் நெய்வேலி என்எல்சி நிறுவனம் 2-வது சுரங்கத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
- பின்பக்க கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடலூர்:
நெய்வேலி புதுநகர் 2-வது வட்டம் மெட்ராஸ் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவர் நெய்வேலி என்எல்சி நிறுவனம் 2-வது சுரங்கத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சம்பவத்தன்று சிவராமன் தனது சொந்த ஊரான குள்ளஞ்சாவடி அருகே அணுக்கம்பட்டு கிராமத்திற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று அவரது வீடுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 4 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சிவராமன் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- தீ மளமளவென எரிந்ததால் வீட்டிலிருந்த எந்த பொரு ள்களும் எடுக்க முடிய வில்லை.
- வீடு எரிந்து 2 மணி நேரத்துக்கு பிறகு மின் துறையைச் சார்ந்த ஊழியர் ஒருவர் வந்ததாக தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த பெருமுளை கிராமத்தில் உள்ள பழைய காலனி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 4 குடிசை வீடுகளில் 5 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கட்டிமுத்து, ராஜவேல், ரங்கசாமி, அஞ்சலை, சக்திவேல் ஆகிய 5 பேரின் கூரை வீடுகள் இன்று காலை மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் 4 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீ மளமளவென எரிந்ததால் வீட்டிலிருந்த எந்த பொரு ள்களும் எடுக்க முடிய வில்லை.
அதனால் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் விரைந்து வந்து தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவாமல் தீயை அனைத்தனர். இது குறித்து அங்கு வசிக்கும் பொது மக்கள் கூறுகையில், மின் கம்பி அறுந்து கூரை மேல் விழுந்ததால் தீ பிடித்து எரிந்தது. மின் கம்பி அறுந்து விழுந்து வீடு தீப்பற்றி எரிவதாக திட்டக்குடி மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் வீடு எரிந்து 2 மணி நேரத்துக்கு பிறகு மின் துறையைச் சார்ந்த ஊழியர் ஒருவர் வந்ததாக தெரிவித்த னர். அடுத்தடுத்து 4 வீடுகள் தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சிதம்பரத்தில் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பயணிகளிடம் அடாவடியாக வசூல் செய்வதை ஆட்டோ டிரைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கடலூர்:
சிதம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து பஸ்நிலையத்துக்கு பயணிகளிடம் அதிகமான வாடகை வசூல் செய்வதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் 5 ஆட்டோ வாகனங்கள் அதிகமாக வசூல் செய்ததற்காகவும், தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம், காப்புச் சான்று இல்லாமல் வாகனத்தை இயக்கியதற்காகவும் அதனை பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தினார். இனிவரும் காலங்களில் கோவில் நகரமான சிதம்பரத்துக்கு வருகை தரும் பயணிகளிடம் அடாவடியாக வசூல் செய்வதை ஆட்டோ டிரைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இச்சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
- கடலூர் அருகே டிராக்டர் பெட்டி திருடப்பட்டது.
- குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் கயல் வேந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி கீழூரை சேர்ந்தவர் கயல் வேந்தன் (வயது 38). இவர் குறிஞ்சிப்பாடி பஸ் நிறுத்தம் அருகே தனக்கு சொந்தமான டிராக்டர் பெட்டியை நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று தனது டிராக்டர் பெட்டியை கொண்டு வருவதற்கு செல்லும்போது அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் பெட்டியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு 2 லட்சம் ஆகும். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் கயல் வேந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குளியலறையில் இருந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
- ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் முதுநகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 25). எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சம்பவத்தன்று நள்ளிரவு சென்று குளியலறையில் இருந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமியின் தாய் சந்தேகமடைந்து வீட்டின் குளியல் அறையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.அப்போது ஆகாஷை சிறுமியின் தாய் பிடிக்க சென்றபோது அவரை தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்ததின் பேரில் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- பண்ருட்டி அருகே சாலைபணி நிறுத்தியதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
- சுமார் அறை மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
கடலூர்:
பண்ருட்டி அருகே சிறு வத்தூர் ஊராட்சியில் ஒன்றிய பொதுநிதி மூலம் த.வா.க.கவுன்சிலர் விஜய தேவி தேவராஸ் எஸ்.ஏரிப்பாளையம் புதுநகர் பகுதியில் 7.5 லட்சம் மதிப்பில் தார் சாலை போடும் பணி தொடங்கி அந்த பணி தற்போது நடை பெற்று வருகிறது. அப்போது அங்கு வந்த ஊராட்சிமன்ற தலைவர் முருகன் என்னிடம் எந்த தகவலும் கூறாமல் சாலை போடுவதால் பணியை நிறுத்த வேண்டும் என்றார். இதனால் த.வா.க.கவுன்சிலர் விஜயதேவிதேவராசு ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் எஸ்.ஏரிப்பாளையம் மெயின்ரோட்டில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற மறியலில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் அைற மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
- பண்ருட்டி அருகே முந்திரி எண்ணை தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தது.
பண்ருட்டி:
பண்ருட்டி போலீஸ் லைன் 6-வது தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில் அ.தி.மு.க. பிரமுகர். இவருக்கு சொந்தமான முந்திரி எண்ணெய் தயாரிக்கும் கம்பெனி பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம், ஆண்டிகுப்பம் வீராணம் தெருவில் உள்ளது.
இந்த கம்பெனியை விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (47) என்பவர் குத்தகை எடுத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்று இரவு வேலை முடிந்து ஆலையை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்.
நள்ளிரவு 1 மணியளவில் முந்திரி எண்ணெய் ஆலை திடீர் என தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் ஆலையில் உள்ளே இருந்த 1500 மூட்டை முந்திரி, 500 லிட்டர் முந்திரி எண்ணெய் முழுவதும் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர், முத்தாண்டிகுப்பம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் பண்ருட்டி நிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விடிய, விடிய தீயை அணைக்கும் பணி நடந்தது. 2-வது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தது.
பண்ருட்டி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வந்ததும், மொழி தெரியாமல் அங்கேயே சுற்றித்திரிந்தார். இதனை பார்த்த ரெயில்வே போலீசார் சுஜிதாவை மீட்டு, கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- போலீசில் சுஜிதா, தான் கடலூரை சேர்ந்த தனது காதலன் வெங்கடேசை தேடி வந்ததை தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 21). இவருக்கும், ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த சுஜிதா (21) என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. பின்னர் இருவரும் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையே சுஜிதாவின், பெற்றோர் அவரது காதலை ஏற்காமல் வேறு இடத்தில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி சுஜிதா, தனது காதலனை கரம்பிடிக்க முடிவு செய்தார்.
அதன்படி ஆந்திராவில் இருந்து ரெயில் ஏறி கடலூர் வந்தார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வந்ததும், மொழி தெரியாமல் அங்கேயே சுற்றித்திரிந்தார். இதனை பார்த்த ரெயில்வே போலீசார் சுஜிதாவை மீட்டு, கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது போலீசில் சுஜிதா, தான் கடலூரை சேர்ந்த தனது காதலன் வெங்கடேசை தேடி வந்ததை தெரிவித்தார். இதையடுத்து போலீசார், வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். அப்போது அவரிடம் போலீசார் விசாரித்ததில் வெங்கடேஷ், சுஜிதாவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். ஆனால் சுஜிதா, அவரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார்.
இதையடுத்து போலீசார், வெங்கடேசை சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து போலீசார் தங்களது சொந்த செலவில் சீர்வரிசை பொருட்கள் வாங்கி கொடுத்து, வெங்கடேசுக்கும், சுஜிதாவுக்கும் திருப்பாதிரிப்புலியூர் நாகம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து வெங்கடேஷ் தனது காதல் மனைவியை வீட்டுக்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் மொழி தெரியாமல் கடலூருக்கு வந்த பெண்ணுக்கு தனது காதலனை போலீசார் திருமணம் செய்து வைத்தது மட்டுமின்றி பெண்ணுக்கு தேவையான சீர்வரிசையும் போலீசார் வழங்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மகளிர் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
கடலூர்:
புவனகிரியில் சிதம்பரம் விருத்தாச்சலம் சாலையில் அமைந்துள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு போதை பொருள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.இதில் புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ், பள்ளி தலைமை ஆசிரியர்ரவி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- கார் சிக்னல் அருகே சற்று மேடாக இருந்ததால் செல்ல முடியாமல் திணறியது.
- இரும்பை சிறிய துண்டு–களாககாரில் நூதன முறையில் திருடி வந்தது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் திருப்பாதி ரிப்பு லியூர் சிக்னல் அருகே டி.எஸ்.பி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சிதம்பரத்தி லிருந்து கடலூர் நோக்கி வந்த கார் சிக்னல் அருகே சற்று மேடாக இருந்ததால் செல்ல முடியாமல் திணறி யது. இதனைப் பார்த்த போலீசார் சந்தேகமடைந்து காரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த காரில் பின்பக்கம் சீட் பகுதியில் இரும்பு குவிந்து இருந்த தை பார்த்து சந்தேகம் அடைந்தனர். பின்னர் கடலூர் திருப்பாதி ரிப்புலி–யூர் போலீஸ் நிலையத்தில் கார் மற்றும் 2ேபர்களை பிடித்து சென்று ஒப்படை–த்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில், காரில் வந்தவர்கள் கடலூர் திருச்சோபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை (வயது 62)நடுவீரப்பட்டை சேர்ந்த பிரகாஷ் (வயது 38) என்பது தெரிய வந்தது. இவர்கள் கடலூர் அருகே உள்ள தனியார் கம்பெனி–யில் இருந்து ஒரு டன் இரும்பை சிறிய துண்டு–களாககாரில் நூதன முறையில் திருடி வந்தது தெரிய வந்தது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வள்ளலார் வணங்கி வழிபட்ட பழமையான விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது.
- சாலை விரிவாக்கபணிக்காக இந்தக் கோவிலை இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது.
கடலூர்:
பண்ருட்டி அருகே அமைந்துள்ளது கண்டரக்கோட்டை கிராமம். இங்கு சென்னை சாலையில்பழமையான விநாயகர் கோவில்உள்ளது. இக் கோவில் வள்ளலார் வணங்கி வழிபட்ட சிறப்பு பெற்றது. சாலை விரிவாக்கபணிக்காக இந்தக் கோவிலை இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. முன்னதாக கோவில் அலுவலர்கள், கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் அங்கு சிறப்பு பூஜை நடத்தி அங்கிருந்த விக்கிரகங்களை வேறு இடத்துக்கு கொண்டு சென்று வழிபாடு செய்தனர்.






