நெய்வேலி என்.எல்.சி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

சிவராமன் நெய்வேலி என்எல்சி நிறுவனம் 2-வது சுரங்கத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பின்பக்க கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நெய்வேலி  என்.எல்.சி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
Published on: 

கடலூர்:

நெய்வேலி புதுநகர் 2-வது வட்டம் மெட்ராஸ் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவர் நெய்வேலி என்எல்சி நிறுவனம் 2-வது சுரங்கத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சம்பவத்தன்று சிவராமன் தனது சொந்த ஊரான குள்ளஞ்சாவடி அருகே அணுக்கம்பட்டு கிராமத்திற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று அவரது வீடுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 4 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சிவராமன் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com