கடலூர் முதுநகரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் தப்பி ஓட்டம்

குளியலறையில் இருந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
கடலூர் முதுநகரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் தப்பி ஓட்டம்
Published on

கடலூர்:

கடலூர் முதுநகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 25). எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சம்பவத்தன்று நள்ளிரவு சென்று குளியலறையில் இருந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமியின் தாய் சந்தேகமடைந்து வீட்டின் குளியல் அறையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.அப்போது ஆகாஷை சிறுமியின் தாய் பிடிக்க சென்றபோது அவரை தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்ததின் பேரில் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com