என் மலர்
கடலூர்
- இளையராஜாவின் தாய் மீனாவை அடித்து மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- காயம் அடைந்த புவனேஸ்வரி, மீனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்
கடலூர்:
கடலூர் முதுநகரை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூபதி என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்று இளையராஜாவிடம் பூபதி மற்றும் சேதுபதி ஆகியோர் குடிபோதையில் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இளையராஜாவின் தாய் மீனாவை அடித்து மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த புவனேஸ்வரி, மீனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் பூபதி மற்றும் சேதுபதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே கே.என். பேட்டையை சேர்ந்தவர் சம்பத். அவரது மனைவி சரிதா (வயது 23). கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் சரிதாவுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தன்று சரிதா தனது கணவர் சம்பத்திடம், தான் தூங்க செல்வதாக கூறி வீட்டில் உள்ள அறைக்கு சென்றவர் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 7 வருடத்திற்குள் சரிதா இறந்த காரணத்தினால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார்.
- பசுமை இல்ல வாயுக்களோடு சேர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என்பதை ஆழமாக வலியுறுத்தினர்.
- பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் போன்ற சிறந்த செய்திகளை எடுத்துரைத்தனர்.
கடலூர்:
நெய்வேலி- வடக்குத்தி லுள்ள ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள், ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர்சி . ஆர். ஜெயசங்கர் மற்றும் பள்ளிகளின் இயக்குநர் என். எஸ். தினேஷ் ஆகி யோரின் வழிகாட்டுதலின் பேரில் ஓசோன் படலம் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வையும் , ஓசோனின் நன்மைகளை யும், ஓசோன் படலத்தை நாம் பாதுகாக்காவிட்டால் மக்களாகிய நமக்கு ஏற்படும் தீமைகளையும் தெருக்கூத்து நாடகமாகவும் , வில்லுப்பாட்டு வடிவிலும் நெய்வேலி டவுன்ஷிப்பி லுள்ள கோல்டன் ஜூப்ளி பூங்காவில் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினர்.புறஊதாக் கதிர்களின் தாக்குதல்களிலிருந்து பூமியைக் காப்பாற்றுவ தோடு, மற்ற பசுமை இல்ல வாயுக்களோடு சேர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என்பதை ஆழமாக வலியுறுத்தினர்.
மேலும்,ஓசோன் வாயுக்கள் அழிக்கப்படும் நிலை உருவானால், பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயர்ந்து, நில பரப்பு அழிந்து, அதிக வெப்பம் காரணமாக வறட்சி அதிகரிக்க ஆரம்பிக்கும். மிகவும் முக்கியமாக ஓசோன் வாயுக்கள் அழிந்தால் மனி தர்களையும், விலங்கு களையும் புற ஊதாக் கதிர்கள் எளிதில் நேரடியாகத் தாக்கும். இதனால் தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலுக்கு பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும். என்பதனை தெருக்கூத்து நாடக வடிவில் மிக அழகாக எடுத்துரைத்தனர். மேலும், வில்லுப்பாட்டின் மூலம், குளுரோ புளுரோ கார்பன் பயன்படுத்துவதை தவிர்த்தாலே நாம் ஓசோன் சேதமடைவதை பாதி நிறுத்தி விடலாம். இதற்கு தடை விதித்த போதிலும், பல நாடுகளில் இன்றும் இதை பயன்படுத்தி க்கொண்டு தான் உள்ளனர். இதை தடுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மண்ணை சிறிது சிறிதாக செயலிழக்க செய்யும் பிளாஸ்டிக், பாலிதீன் ஆகியவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். என்பன போன்ற சிறந்த செய்திகளை எடுத்துரைத்தனர்.
இளம் வயதிலேயே ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்களின் இத்தகைய பொதுநல சேவையைச், சுற்றுச்சூழல் மீதான அக்கறையை, நெய்வேலி டவுன்ஷிப்பி லுள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.இதற்கான ஏற்பாடு களைப் பள்ளியின் செயலாளர் சிந்து,பள்ளி முதல்வர்பிந்து, நிர்வாக மேலாளர்ச ரண்யா ,அழகுவேல், நடிப்பு கலை பேராசிரியர் பாலா மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
- சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த காய்ச்சல் சளி, போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
- குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
கடலூர்:
தமிழக முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் அதிகமாக பரவி வருகிறது. இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த காய்ச்சல் சளி, போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை வழக்கத்தை விட தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தற்போது குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் பெரியவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களும் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்று செல்லும் நிலை கடலூரில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் நிலவியுள்ளது.
இதனையடுத்து சுகாதாரத்துறை டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் கடலூரில் பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் சிறப்பு முகம் மூலம் பொது மக்களுக்கு காய்ச்சல் சளி போன்றவை இருக்கிறதா என்பதை பரிசோதித்து அதற்கு சிகிச்சை மற்றும் இந்த காய்ச்சல் சளி பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து கணக்கு எடுத்து வருகின்றனர்.
மேலும் நகராட்சி பேரூராட்சி தூய்மை பணியா ளர்கள் அனை வரும் தெருக்களிலும் வீதிகளிலும் கொசுவை ஒழிக்கும் விதமாக கொசு மருந்து அடிக்கவும் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட மக்களின் நலன் காக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் மற்றும் பரவி வரும் காய்ச்சலை ஒழிக்க சுகாதாரத் துறை மாவட்ட நிர்வாகம் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
- வீட்டுமனை வாங்கி தருவதாக 11 லட்சம் காசோலையாகவும், 6 1/2 லட்சம் பணமாகவும் பெற்றுள்ளார்.
- இதுவரை பணமும் தரவில்லை, வீட்டுமனையும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 31). கடலூர் பெரியகாட்டு பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கிருஷ்ணமூர்த்திடம் வீட்டுமனை வாங்கி தருவதாக 11 லட்சம் காசோலையாகவும், 6 1/2 லட்சம் பணமாகவும் என மொத்தம் 17 1/2 லட்சம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். ஆனால்இதுவரை பணமும் தரவில்லை, வீட்டுமனையும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணமூர்த்தி குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வெங்கடேசன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலத்த காயமடைந்த சந்திரகாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாசு (வயது60). இவர் நேற்று மாலை 5 மணியளவில் பரவலூர் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது விருத்தாசலம் நோக்கி வந்த கார் சந்திரகாசு மீது மோதியது . இதில் பலத்த காயமடைந்த சந்திரகாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை நேரில் பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.
பின்னர் விருத்தாசலம் வேப்பூர் சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் விருத்தாசலம் சேலம் சாலை மார்க்கத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சக்திவேலுக்கும், சுமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- சம்பவத்தன்று சுமன் தனது நண்பர் சக்திவேலை மதுகுடிக்கலாம் என்று கூறி அழைத்து சென்றார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் பிரகாஷ். அவரது மனைவி பூமிகா (வயது 23). இவர் இன்ஸ்டாகிராமில் நடிகைபோல் சித்தரித்து அடிக்கடி பாடல்கள் பாடி பதிவிட்டு வந்தார்.
இதன் மூலம் இவருக்கு பலர் இணைப்பில் இருந்தனர். இதனை அறிந்த கணவர் பிரகாஷ் கண்டித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பின்னர் பூமிகா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
அப்போது பண்ருட்டியில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு செல்லும்போது பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்திநகர் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. எனவே சக்திவேலை பூமிகா திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் தன்னை அழகு பெண்ணாக சித்தரித்து மீண்டும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவந்தார். அப்போது சக்திவேலின் நண்பரும், ஆட்டோ டிரைவர் சுமன் என்பவருக்கு பூமிகாவுடன் காதல் ஏற்பட்டது. அவரையும் பூமிகா திருமணம் செய்து கொண்டார்.
இதன் காரணமாக சக்திவேலுக்கும், சுமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று சுமன் தனது நண்பர் சக்திவேலை மதுகுடிக்கலாம் என்று கூறி அழைத்து சென்றார். பின்னர் தனது கூட்டாளிகளுடன் சக்திவேலை சுமன் வெட்டி கொன்றார்.
இதனை அறிந்த இன்ஸ்டாகிராம் காதலி பூமிகா திடீரென மாயமானார். பின்னர் பண்ருட்டியில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கிகிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் பூமிகாவை தூக்கிகொண்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி பூமிகா இறந்தார்.
- வாகன ஓட்டுநர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படவும், இதனால் உயிர்ச்சேதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
- எதிர்காலத்தில் இதுபோன்ற அனுமதியற்ற விளம்பரங்கள் மீண்டும் உருவாகமல் இருக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
கடலூர் நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள், சாலையின் மையப் பகுதிகள் பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மீதுள்ள அனுமதியில்லாமல் உள்ள விளம்பர பலகைகள், டிஜிட்டல் விளம்பர தட்டிகள் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள் அமைக்கப்படுவதால் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் வாகன ஓட்டுநர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படவும், இதனால் உயிர்ச்சேதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, முறைகேடான வகையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற அனுமதியற்ற விளம்பரங்கள் மீண்டும் உருவாகமல் இருக்க வேண்டும். விளம்பர பலகைகள் அமைப்பதற்கான விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
- மீன் மார்க்கெட்களிலும் , சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதி காணப்படும்.
- அசைவ ஹோட்டல்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த வாடிக்கையாளர்களே இருந்ததை காண முடிந்தது.
கடலூர்:
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இதன் காரணமாக புரட்டாசி மாதம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பெருமாள் கோவில்களுக்கு சனிக்கிழமைகளில் செல்வதோடு வீடுகளில் அசைவம் சமைக்காமலும், சாப்பிடாமலும் விரதம் இருப்பது வழக்கமாகும். இது மட்டும் இன்றி புரட்டாசி மாதங்கள் சனிக்கிழமைகளில் நாமம் போட்டு நாராயண கோபால எடுத்து சிறப்பு வழிபாடு செய்வதும் வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக புரட்டாசி மாதம் தொடங்குவதற்கு முன்பு பெரும்பாலான வீடுகளில் தங்களுக்கு தேவையான அசைவ உணவுகளை விரும்பி உண்பார்கள். இதனைத் தொடர்ந்து புரட்டாசி மாதம் தொடங்கியவுடன் தங்கள் விரதமுறையை பொதுமக்கள் கடைப்பிடிப்பார்கள். இந்த நிலையில் இன்று புரட்டாசி மாதம் தொடங்கியது.
இதன் காரணமாக எப்போதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களிலும் , சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்த நிலையில் இன்று புரட்டாசி தொடங்கியதால் கடலூர் துறைமுகம், மீன் மார்க்கெட்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து கூட்டம் இன்றி காணப்பட்டாலும் சிக்கன், மட்டன் மற்றும் மீன் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இது மட்டும் இன்றி அசைவ ஹோட்டல்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த வாடிக்கையாளர்களே இருந்ததை காண முடிந்தது.
- குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- நடமாடும் மருத்துவக்குழுக்களை உருவாக்கி கிராமங்கள் தோறும் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
கடலூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தொடர் காய்ச்சல், இருமல், சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மருத்துவமனைகள், நகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நடமாடும் மருத்துவக்குழுக்களை உருவாக்கி கிராமங்கள் தோறும் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
- கடலூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- பொதுச்செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கடலூர்:
கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் சார்பில் கெடிலம் ஆற்றில் தனியார் சர்க்கரை ஆலை கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரியும் , மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும், கெடிலம் பெண்ணை ஆற்றின் கரைகளை உயர்த்தி வெள்ளத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்பாட்டத்திற்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார் . இணைபொதுச்செயலாளர் புருஷோதம்மன் முன்னிலை வகித்தார்.பொதுச்செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்பாட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கண்ணபிரான், கோபால், லட்சுமிநாராயணன் , காசிநாதன், ரமணி, கல்யாணகுமார், ராதாகிருஷ்ணன், சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுகுமாறன் நன்றி கூறினார்.
- கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது.
- அனைவருக்கும் இலவசமாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பொது மக்களை பாதிக்காமல் தடுக்கும் வகையில் சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் சுமார் 3742 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 2-வது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது. குறைக்கப்பட்டு தற்சமயம் 6 மாத இடை வெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் வருகிற 30-ந் தேதி வரை 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச மாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் முழு மையாக செலுத்தப் பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தற்போது 12,78,000 பய னாளிகள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திட வேண்டியுள்ளனர். அவர்கள் இந்த இலவச தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கொரோனா தொற்று தற்போது மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானாலும் அது தீவிரமாகாது என்பதால், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.






