கார் மோதி முதியவர் பலி சாலை விபத்தினை தடுக்க கோரி பொது மக்கள் சாலை மறியல்

பலத்த காயமடைந்த சந்திரகாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.
கார் மோதி முதியவர் பலி சாலை  விபத்தினை தடுக்க கோரி  பொது மக்கள் சாலை மறியல்
Published on

கடலூர்:

விருத்தாசலம் அருகே கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாசு (வயது60). இவர் நேற்று மாலை 5 மணியளவில் பரவலூர் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது விருத்தாசலம் நோக்கி வந்த கார் சந்திரகாசு மீது மோதியது . இதில் பலத்த காயமடைந்த சந்திரகாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  விபத்தை நேரில் பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.

பின்னர் விருத்தாசலம் வேப்பூர் சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் விருத்தாசலம் சேலம் சாலை மார்க்கத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com