search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் 3,742 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்:   நாளை நடக்கிறது
    X

    கடலூர் மாவட்டத்தில் 3,742 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்: நாளை நடக்கிறது

    • கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது.
    • அனைவருக்கும் இலவசமாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பொது மக்களை பாதிக்காமல் தடுக்கும் வகையில் சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் சுமார் 3742 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 2-வது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது. குறைக்கப்பட்டு தற்சமயம் 6 மாத இடை வெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் வருகிற 30-ந் தேதி வரை 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச மாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் முழு மையாக செலுத்தப் பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் தற்போது 12,78,000 பய னாளிகள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திட வேண்டியுள்ளனர். அவர்கள் இந்த இலவச தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கொரோனா தொற்று தற்போது மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானாலும் அது தீவிரமாகாது என்பதால், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×