என் மலர்tooltip icon

    கடலூர்

    • மாணவர்கள் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
    • முதற்கட்டமாக காய்ச்சல் அதிகமாக காணப்படும் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் புகை மருந்து தெளிக்கப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களிடையேயும் இந்த காய்ச்சல் அதிக அளவு பரவி வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    அதேபோல் பள்ளி மாணவர்களிடையே காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், பள்ளிகளில் புகை மருந்து தெளிக்கும் பணி நடைபெறுகிறது. வகுப்பறைகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு புகை மருந்து தெளிக்கப்படுகிறது. மருந்தின் தாக்கம் 10 நிமிடங்கள் வரை இருக்கும் என்பதால், 10 நிமிடங்களுக்கு பிறகே மாணவர்கள் வகுப்பறைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதன்மூலம் மாணவர்களுக்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    முதற்கட்டமாக காய்ச்சல் அதிகமாக காணப்படும் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் புகைமருந்து தெளிக்கப்படுகிறது. அதன்பின்னர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    மேலும் மாணவர்கள் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும், காய்ச்சல் சரியாகும் வரை வீட்டில் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும், வீட்டின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலங்கல் வழியாக மணப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வருவது தடைபட்டது.
    • மணப்பாக்கம் ஏரிக்குநீர்வரத்து துவங்கியுள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மணப்பாக்கம் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு நத்தம் ஏரியிலுள்ள 10 அடி கலங்கில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். இந்த தண்ணீர் வரும் வழியில் தற்போது 2 அடி உயரத்திற்கு தார்சாலை அமைத்தும் கலங்கல் பகுதியில் செங்கல்சூளை கற்கள் பெருமளவுக்கு குவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்தகலங்கல் வழியாக மணப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வருவது தடைபட்டது. மணப்பாக்கம் ஏரி நிரம்பினால் தண்ணீர்வரும் வழியில் உள்ள நத்தம், மேல்அருங்குணம், மனம் தவழ்ந்தபுத்தூர், ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    மேலும் ஏரியிலிருந்து மதகுகள் வழியாக தண்ணீர் சென்று சுமார் 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பண்ருட்டி நகரம், திருவதிகை வரையில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    எனவே தற்போது வரையில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரால் ஏரியை நிரப்பி மக்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என்று மணப்பாக்கம் விவசாயி ஜானகிராமன் கடலூர் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தார்

    இந்த செய்தி மாலைமலரில் வெளி வந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் கலெக்டர்அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.மணப்பாக்கம் ஏரிக்குதண்ணீர் செல்லும்கலங்கல் வாய்க்காலை தற்காலிகமாக சீர் செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து தற்போது மணப்பாக்கம் ஏரிக்குநீர்வரத்து துவங்கியுள்ளது.இதனால்விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிரந்தர ஏற்பாடாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கடலூர் பீச்ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் பலியானார்.
    • கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் பீச்ரோட்டில் வள்ளலார் கோவில் அருகே நடந்து சென்ற 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர்நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். இதில் படுகாயம் அடைந்த அந்த நபர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

    • கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.
    • குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் பெரிய செவலை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), தனது மனைவி விஜயபாரதி வயது 26 , சசோந்த் (2 வயது குழந்தை) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சத்திரம் - குள்ளஞ்சாவடி சாலையில் அம்பலவாணன் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென்று முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 2 வயது குழந்தை மற்றும் தாய், தந்தை ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த மூன்று பேரையும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூரில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மாவட்ட செயலாளர் பழநி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கடலூர் மாவட்டம் சார்பாக 01.01.2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படி நிலுவை தொகையினை வழங்க வேண்டும். 1.07.2022 முதல் மருத்துவ காப்பீட்டு சந்தா தொகை 497 ரூபாயாக உயர்த்தியதை ரத்து செய்து 350 ரூபாயாக குறைத்திடவேண்டும். கொரோனா சிகிச்சை கட்டணம் செலவுத் தொகையை உடன் திரும்ப வழங்கிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம ஊழியர், வனக்காவலர்கள், கிராமபுற நூலகர்களுக்கு ஓய்வூதியம் 7850 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் கடலூர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். வட்டக்கிளை நிர்வாகிகள் ராமதாஸ் , அன்பழகன், முத்தமிழ்ச்செல்வி, பன்னீர்செல்வன் ,செல்வராஜ், குமாரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இணைச் செயலாளர் பாலு, பச்சையப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பழநி கோரிக்கைகளை விளக்கி பேசினார் . ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், தொழிலாளர் நலத்துறை ஓய்வூதியர் சங்க பூண்டியாங்குப்பம் சாம்பசிவம், குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் தேவராஜ் வோளண்மை அனைத்து ஊழியர் சங்க மாவட்டத் தவைர் சுந்தரமூர்த்தி, மாவட்ட தவைர்சிவராமன், பொதுச் செயலாளர் மருதவானன், இந்து சமய அறயநிலைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சுப்ரமணியம் அலுலக உதவியாளர் அலுவலக பணியாளர் ஓய்வூதியர் சங்கம் மாவட்டத் தலைவர் பக்தவச்சலம், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரட்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஆதவன், ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். இதில் நிர்வாகிகள் கருணாகரன் , சிவப்பிரகாசம் , கலியமூர்த்தி , பத்பநாபன், ராமனுஜம் , ஞானமணி . சிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சி.குழந்தைவேலு நன்றி கூறினார். 

    • கோவிலானூர் மணிகண்டன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    வடலூர் நகர பாரதீய ஜனதா கட்சி சார்பாக கடந்த 17-ந் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி, படத்தை வடலூர்நகராட்சி அலுவலகத்தில் பொரு த்தப்பட்டது. அந்த படத்தை நகராட்சியில் கலெக்டர் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டதால் அகற்ற ப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பா.ஜ.க.வினர்,வடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பதட்டமான சூழல் உருவா னதால் போலீசார் பா.ஜ.க. வினரைதடுத்ததால், கோவி லானூர் மணிக ண்டன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நகரத்தலைவர் திருமுருகன் மாவட்ட செயலாளர்கள் பெருமாள், கார்த்திகேயன், மூர்த்தி சிறப்பு அழைப்பாளர் மாநில செயற்குழு உறுப்பினர் தேவசரவணா சுந்தரம் ,விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் செல்வமணி ,ஓ பி சி அணி மாநில செயலாளர் அரங்கநாதன், இளைஞர் அணி மாநில செயலாளர் ரமேஷ், மகளிர் அணி மாநில செயலாளர் சுபஸ்ரீ தவபாலன் ,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது வடலூர் போலீசார் பாஜக நிர்வாகிகள் 52 பேரை கைது செய்தனர். 

    • சுற்றுலா செல்லும்போது அருகில் உள்ள மற்றொரு வீட்டில் உள்ளவர்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • 50 பவுன் மற்றும் 10 லட்சம் ரொக்க பணத்தை மர்ம கும்பல்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே லிங்கா ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 49). இவர் வெளிநாட்டில் (துபாய்) தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30-ம் தேதி இவரது மனைவி கவுரி மகன் பாலகிருஷ்ணனுடன் உறவினர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது கவுரி வீட்டில் நாய் ஒன்று வளர்த்து வந்தார். அந்த நாயை சுற்றுலா செல்லும்போது அருகில் உள்ள மற்றொரு வீட்டில் உள்ளவர்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். அருகில் இருந்த வீட்டிலிருந்தவர் மறுநாள் காலை நாய்க்கு உணவளிக்க சென்றுள்ளார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சுற்றுலா சென்ற வீட்டின் உரிமையாளர் கௌரிக்கு தகவல் தெரிவித்தார். இதை கேட்ட கவுரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பின் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைந்து அதில் இருந்த வைர நகை தங்க நகை உள்ளிட்ட 50 பவுன் மற்றும் 10 லட்சம் ரொக்க பணத்தை மர்ம கும்பல்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து கவுரி பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த தேடுதல் வேட்டையில் பண்ருட்டி அருகே இந்த கொள்ளை சம்பந்தமாக 2 நபர்களை சந்தேகத்திற்கு இடமாக பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லிக்குப்பம் எய்தனூர் குதியைச் சேர்ந்த செந்தில் முருகன் (வயது 24), மேல்பட்டாம்பாக்கம் செல்வமணி (23) என்றும், கவுரியின்வீடடில் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இவர்கள் அளித்த தகவலின் பெயரில் இந்த கொள்ளைக்கு காரணமாக இருந்த உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த இளையபெருமாள் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 50 பவுன் வைரம் தங்க நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்டு தலை மறைவாக உள்ள 2 நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 

    • விருத்தாசலம் அருகே குட்டையில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
    • விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர் குட்டையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துவிட்டது.

    கடலூர்:

    விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை மெயின்ரோட்டைச் சேர்ந்த ராஜதுரை (வயது.46), விவசாயி. இவருடைய பசு மாடு ஒன்று, மங்கலம்பேட்டையில், விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர் குட்டையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டது. இது குறித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அந்த பசு மாட்டினை உயிருடன் மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • குள்ளஞ்சாவடி அருகே சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்.
    • ஸ்ரீகாந்தை ஜாமீனில் விடுவிக்க இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் 10,000 ரூபாய் லஞ்சம் தருமாறு பேரம் பேசியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், (வயது35) இவர் மீது குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குள்ளஞ்சாவடி போலீசார் அடிக்கடி கைது செய்வது வழக்கம். கடந்த 5 நாட்களுக்கு முன்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து கடலூர் அரசு மருத்துவமனையில் உடல் தகுதிசான்றிதழ் பெற பரிசோதனைக்காக அழைத்து வந்தனர்.

    உடல்நிலை சரியில்லாததால் உடல் தகுதி சான்றிதழ்வழங்க டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

    இதன் காரணமாக ஸ்ரீகாந்தை ஜாமீனில் விடுவிக்க இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் 10,000 ரூபாய் லஞ்சம் தருமாறு பேரம் பேசியுள்ளார். ஆனால், ஸ்ரீகாந்த் 5,000 ரூபாய் மட்டுமே தருவதாக ஒப்புக் கொண்டார்.

    இதுகுறித்து ஸ்ரீகாந்த், கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி போலீஸ் நிலையத்திற்கும் இன்ஸ்பெக்டர் குடியிருப்பிற்கும் இடையே நின்றிருந்த இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரிடம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஸ்ரீகாந்த் கொடுத்தார்.

    அங்கு மறைந்திருந்த ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், அன்பழகன், சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார், இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரை அதிரடியாக கைது செய்தனர்.

    கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்ப நாய் வந்தது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 47). விவசாயி. இவர் இன்று காலை தனது மனைவியுடன் விளைநிலத்துக்கு சென்று விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    வயலில் இருந்து வீடு திரும்பிய நந்தகோபால் வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் கொள்ளை ேபாய் இருந்தது.பதறி போன அவர் இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்ப நாய் வந்தது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

    இதேபோல் குச்சிபாளையத்தில் உள்ள விவசாயி வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது.

    • சீனிவாசன் (வயது 21) என்பவர் நடந்து சென்ற சிறுவனிடம் 50 ரூபாய் பணம் கேட்டு உள்ளார்.
    • சிறுவன் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த சீனிவாசன் சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 21) என்பவர் நடந்து சென்ற சிறுவனிடம் 50 ரூபாய் பணம் கேட்டு உள்ளார்.

    அப்போது சிறுவன் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த சீனிவாசன் சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

    • ஆத்திரமடைந்த தணிகாசலம் தனது நண்பர் ரகுநாத்தை பீர் பாட்டில்களால் தாக்கினார்.
    • காயம் அடைந்த ரகுநாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டியை சேர்ந்தவர் ரகுநாத் (வயது 40). இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பர் தணிகாச்சலம் என்பவருடன் புதுவை மாநிலம் குருவி நத்தத்தில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு, புதுவை மாநில பகுதியில் மது வாங்கிக் கொண்டுவந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகே மது அருந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்குள் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த தணிகாசலம் தனது நண்பர் ரகுநாத்தை பீர் பாட்டில்களால் தாக்கினார். இதில் காயம் அடைந்த ரகுநாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ரகுநாத் கொடுத்த புகாரின் பேரில் தணிகாசலம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×