search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கலெக்டர் அதிரடி நடவடிக்கை: கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை ஏரியில் நிரப்ப ஏற்பாடு
    X

    நத்தம் ஏரியிலிருந்து மணப்பாக்கம் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் சீரமைக்கப்பட்டு மணப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் காட்சி.

    கடலூர் கலெக்டர் அதிரடி நடவடிக்கை: கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை ஏரியில் நிரப்ப ஏற்பாடு

    • கலங்கல் வழியாக மணப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வருவது தடைபட்டது.
    • மணப்பாக்கம் ஏரிக்குநீர்வரத்து துவங்கியுள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மணப்பாக்கம் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு நத்தம் ஏரியிலுள்ள 10 அடி கலங்கில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். இந்த தண்ணீர் வரும் வழியில் தற்போது 2 அடி உயரத்திற்கு தார்சாலை அமைத்தும் கலங்கல் பகுதியில் செங்கல்சூளை கற்கள் பெருமளவுக்கு குவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்தகலங்கல் வழியாக மணப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வருவது தடைபட்டது. மணப்பாக்கம் ஏரி நிரம்பினால் தண்ணீர்வரும் வழியில் உள்ள நத்தம், மேல்அருங்குணம், மனம் தவழ்ந்தபுத்தூர், ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    மேலும் ஏரியிலிருந்து மதகுகள் வழியாக தண்ணீர் சென்று சுமார் 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பண்ருட்டி நகரம், திருவதிகை வரையில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    எனவே தற்போது வரையில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரால் ஏரியை நிரப்பி மக்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என்று மணப்பாக்கம் விவசாயி ஜானகிராமன் கடலூர் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தார்

    இந்த செய்தி மாலைமலரில் வெளி வந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் கலெக்டர்அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.மணப்பாக்கம் ஏரிக்குதண்ணீர் செல்லும்கலங்கல் வாய்க்காலை தற்காலிகமாக சீர் செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து தற்போது மணப்பாக்கம் ஏரிக்குநீர்வரத்து துவங்கியுள்ளது.இதனால்விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிரந்தர ஏற்பாடாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×