என் மலர்
கடலூர்
- பெண்ணாடம் அருகே வீட்டில் பதுக்கிய ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஏட்டு ராஜசேகர் ஆகியோர்சோதனை செய்தனர்.
கடலூர்.
பெண்ணாடம் அருகே, எடையூர் புதுகாலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலித்தொழிலாளி. இவருக்கு அதே பகுதியில் காமராஜர் தெரு வில் பழைய ஓட்டு வீடு உள்ளது. இந்த வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஏட்டு ராஜசேகர் ஆகியோர்சோதனை செய்தனர்.
அப்போது, ராமச்சந்திரன்வீட்டில் 30 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 2,500 கிலோ எடையிலான ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் உதவி ஆய்வாளர் கவியரசுவை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் ராமச்சந்திரனிடம விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கடலூர் அருகே கார் மோதி 2 பெண்கள் பலியானர்கள்.
- காரை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
கடலூர்:
கடலூர் அருகே பெரியபட்டு பகுதியில் இன்று மதியம் கலிபாமேரி உள்பட 5 பேர் சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் கலிபாமேரி, தேவதர்ஷினி ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
- பண்ருட்டி அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
- கலைச்செல்வியையும் கத்தியால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கீழகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் மகன் ராஜ்குமார் (வயது 23). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் ஆதிகுரு இருவரும் நெருங்கிய நண்பர்கள். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாக மது அருந்தும் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவருக்குள்ளும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு ஆதிகுரு நேற்று இரவு அவரது நண்பர்களுடன் ராஜ்குமார் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது தாய் கலைச்செல்வியையும் கத்தியால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ராஜ்குமாருக்கு கை, காது, தலை அவரது தாய் கலைச்செல்விக்கு கை, வயிறு, தலை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரையும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ராஜ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதிகுருவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பண்ருட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தினமும் குடித்துவிட்டு வந்து கடை முன் நின்று அனைவரையும் ஆபாசமாக பேசுவது வழக்கம்.
- ஞானசேகருக்கு தலை மற்றும் காலில் கடுமையாக காயம்ஏற்பட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி டைவேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் ஞானசேகர். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை சொந்தமாக வைத்து வியாபாரம் செய்து வருகிறார். பண்ருட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தினமும் குடித்துவிட்டு வந்து கடை முன் நின்று அனைவரையும் ஆபாசமாக பேசுவது வழக்கம். நேற்று முன்தினம் காலை அதேபோன்று வழக்கமாக மணிகண்டன் கடை எதிரில் வந்து எல்லோரையும் பார்த்து ஆபாசமாக பேசி உள்ளார்.
இதனைப் பார்த்த ஞானசேகர் தினமும் இப்படி செய்தால் நான் எப்படி வியாபாரம் செய்வது. யார் கடைக்கு வருவது என்று அவரைக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அவரை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் ஞானசேகருக்கு தலை மற்றும் காலில் கடுமையாக காயம்ஏற்பட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
- அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சிமெண்ட் ஆலைகள் செயல்பட்டு வருவதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கிறது.
- மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கடலூர், அரியலூர் மாவட்டத்தை இனைக்கும் வெள்ளாற்றில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் சேந்தம ங்கலம் பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்கும் பணி கடந்தவாரம் துவங்கி யது. இந்நிலையில் வெளி மாவட்டத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சிமெண்ட் ஆலைகள் செயல்பட்டு வருவதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. இரண்டு மாவட்டத்திற்கும் பொது மக்களின் போக்குவரத்தும் 2 மாவட்டங்களில் இரு ந்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தினந்தோறும் சென்று வருகின்றனர். இன்று வழக்கம்போல் காலை முதலே பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை ஏற்றி க்கொண்டு பள்ளிக்கு வாகனங்கள் வந்தன.
அப்போது மணல் ஏற்றி வரும் லாரிகள் வெள்ளாற்றில் தரைப்பாலத்தில் நிறுத்திக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக செல்வது மட்டுமல்லாமல் லாரிகள் சாலையின் குறுக்கே நிறுத்து வதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால் சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் இருபுறமும் செல்ல முடியாமல் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் வெகுநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே இதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தலையிட்டு மாணவ மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்லும் வேலையில் இந்த கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும் அரசு மணல் குவாரி இங்கு இயங்க தடை விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அணைக்கட்டு பாதி விழுப்புரம் மாவட்ட பகுதியிலும், பாதி கடலூர் மாவட்ட பகுதியிலும் உள்ளது.
- நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணணை ஆற்றின் குறுக்கே சொர்ணாவூர் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பாதி விழுப்புரம் மாவட்ட பகுதியிலும், பாதி கடலூர் மாவட்ட பகுதியிலும் உள்ளது. இந்த அைணக்கட்டில நேற்று மாலை நண்பர்கள் 5 பேர் குளித்தனர். அப்போது அவர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கினார். உடனே 4 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று ேதடுதல் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் அணைக்கட்டு மூழ்கியவர் புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமரன் (வயது 35) என தெரியவந்தது. அவர் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
- மருமகன் பெரிய செவலையை சேர்ந்த சுகனேஷ் கடந்த 18-ந் தேதி திடீர் என இறந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் புதுநகர் போலீஸ் சரகம் கோண்டூர் கல்லூரி ஆசிரியர்நகரை சேர்ந்தவர் சீதாராமன். (வயது 60). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்கள். தற்போது ஊருக்கு திரும்பி உள்ளார். இவரது மருமகன் பெரிய செவலையை சேர்ந்த சுகனேஷ். இவர் கடந்த 18-ந் தேதி திடீர் என இறந்தார். இந்த இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான சீதாராமன் தனது குடும்பத்தினருடன் பெரியசெவலை சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். நேற்று சீதாராமன் ஊருக்கு திரும்பினார். அப்போது வீட்டுக்கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 19 பவுன் நகை, மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது கண்டு சீதாராமன் திடுக்கிட்டார். இதுகுறித்து சீதாராமன் புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
- வீட்டிற்கு தீ வைத்ததாக சிறை வார்டன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- இவ்வழக்கை விசாரித்தவர் கடலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வனஜா.
கடலூர்:
கடலூர் கேப்பர் மலை மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் கடந்த மாதம் 28 - ந்தேதி மர்ம கும்பல் தீ வைத்து குடும்பத்துடன் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வீட்டிற்கு தீ வைத்ததாக சிறை வார்டன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து எண்ணூர் தனசேகரனிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மூன்று நாட்கள் போலீஸ் காவல் கேட்டு கடலூர் முதுநகர் போலீசார் கடலூர் நீதி மன்றத்தில் மனு அளித்தனர். இதற்காக மத்திய சிறையில் இருந்து கைதி பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனை போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் இவ்வழக்கை விசாரித்த கடலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வனஜா, எண்ணூர் தனசேகரனை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
- கோவிலில் 3 கலசங்கள், ஒரு செம்பு குடம் தாம்பாள தட்டு உள்ளிட்ட பொருள்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
- ஆலயத்தில் உள்ள பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஒயர்களை துண்டித்து விட்டு சென்றுள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்துர் கிராமத்தில் ஏரிக்கரையில் தச்சூர் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 கலசங்கள், ஒரு செம்பு குடம் தாம்பாள தட்டு உள்ளிட்ட பொருள்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் இதேபோல் எழுத்தூர் கிராமஊர் அருகே உள்ள அய்யனார் கோயிலில் ஆலயத்தின் முன்பு உள்ள 2 சூலங்கள் பிடுங்கி உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து சுமார் 10,000 பணத்தை திருடி சென்றுள்ளனர்.
அந்த சூலங்களை கோயில் வளாகத்தில் வீசி சென்றுள்ளனர். முன்னதாக ஆலயத்தில் உள்ள பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஒயர்களை துண்டித்து விட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து எழுத்தூர் பகுதியில் உள்ள கோயல்களை திருடர்கள் குறி வைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சந்திரனை சரமாரியாக வெட்டியது.
- இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் மதுரா பக்ரிமணியம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 60). விவசாயி. இவர் இன்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சந்திரனை சுற்றிவளைத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சந்திரனை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சந்திரன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சந்திரனை கொலை செய்த நபர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள்.
- சிதம்பரம் தாலுகா பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டது.
- சிலுவைபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார்.
கடலூர்:
சிதம்பரம் அருே வயலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 43) இவரது வீட்டின் முன்பு இரவு தனது வீட்டில் ராயல் என்பீல்டு பைக்கை நிறுத்திவிட்டு மறுநாள் நள்ளிரவு எழுந்து பார்த்தபோது இவரது பைக்கை காணவில்லை. அதேபோல் புவனகிரி குமுடி மலைப்பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (25) இவர் தனது சிலுவைபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். அதனையும் காணவில்லை.
- திட்டக்குடி அருகே மணல் குவாரி லாரி டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிக்களம் கிராமத்தில் அரியலூர் மாவட்டம் சேந்தமங்கலம் வெள்ளாற்றில் அரசு மணல் குவாரிக்கு மணல் ஏற்ற வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் கடந்த 3 நாட்களாக கொடிக்களம் கிராமத்தில் காத்திருக்கிறார்கள். அரியலூர் மாவட்ட லாரிகளுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்புகை சீட்டு வழங்கி அவர்களின் லாரிகளுக்கு மட்டும் அதிக அளவில் மணல்களை ஏற்றி அனுப்புவதாகவும் இதுவரை 3 நாட்களாக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே தங்களுக்கு மணல் ஏற்ற அனுமதிக்காததை கண்டித்து காத்திருக்கும் லாரி டிரைவர்கள் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் 3 நாட்களாக உணவு உட்கொள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதாகவும் கூறி லாரி டிரைவர்கள் விருத்தாசலம் திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் திட்டக்குடி, விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆவினங்குடி போலீசார் மற்றும் திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை செய்து மணல் குவாரி நடத்தும் ஒப்பந்தக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.






