என் மலர்
கடலூர்
- ஜாமீனில் வந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
- விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு தப்பிச் சென்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்ட க்குடி கடைவீதி தெரு வைச் சேர்ந்தவர் ராம லிங்கம் (வயது48). இவருக்கும் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமண மானது. இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரேணுகா இறந்தார். அவரது இறப்பு வரதட்சணை கொடுமை காரணமாக இறந்து விட்டார் என கூறி அவரது சகோதரர் ராதா கிருஷ்ணன் புகார் செய்தார்.
அதன்பேரில் இது குறித்து விருத்தாச்சலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர். பின் ஜாமீனில் வெளிவந்த ராம லிங்கம் தொடர்ந்து வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு தப்பிச் சென்றார். தலைமறைவான ராம லிங்கம் நேற்று மீண்டும் தமிழகம் திரும்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது நேற்று சென்னை ஏர்போர்ட்டுக்கு சென்ற போலீசார் ராமலிங்கத்தை கைது செய்தனர்.
- வேப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் கண்டபங்குறிச்சி சாலையில் ரோந்து சென்றனர்.
கடலூர்:
வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் மிஸ்டர் டீனு பையா (வயது 20) இவர் கஞ்சா விற்பதாக வேப்பூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது . அதனை தொடர்ந்து வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் கண்டபங்குறிச்சி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பாப்பாத்தி அம்மன் கோவில் அருகே 1250 கிராம் கஞ்சா வைத்துக்கொண்டு விற்பனை செய்ய காத்திருந்த மிஸ்டர் டீனு பையாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 1250 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.
- சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு 2 நாட்கள் நடைபெற உள்ளது.
- தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கை கட்டணம் அன்றே செலுத்த வேண்டும்.
கடலூர்:
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை முதலாமாண்டு பாடப்பரிவுகளுக்கு அரசு கலைக் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பாடப்பரிவிலும் கூடுதலாக 20 சதவீத இடங்களை அதிகரித்து, மாணவர்கள் சேர்க்கை நடத்த அரசு அனுமதித்துள்ளது. அதனடிப்படையிலும் பல்கலைக் கழக அனுமதி பெற்று கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் ஏற்கனவே நிரப்பப்படாத பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுகான காலி இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு (இணைய வழியில்) விண்ணப்பித்தவர்களுக்கு இனச்சுழற்சி மற்றும் தரவரிசை அடிப்படையில் 26 -ந்தேதி மற்றும் 27- ந்தேதி ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது.
கலந்தாய்வு தேதி மற்றும் விபரம்: 26.09.2022- பாடப்பிரிவுகள் பி.எஸ்.சி. கணிதம் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி, புள்ளியியல், இயற்பியல், பொது வேதியியல், தொழில் வேதியியல், சுழற்சி & 2 கணினி அறிவியல் சுழற்சி-1 & 2, பி.சி.ஏ. கணினி பயன்பாட்டியல், தாவரவியல் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி. விலங்கியல் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி. 27-9-2022 கலந்தாய்வு: B.A.தமிழ், B.A,ஆங்கிலம் கழற்சி-1 & ×2} பி.ஏ. பொருளியல் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி பி.காம் , சுழற்சி-1 & -2 மற்றும் பி.பி.ஏ. வணிக நிர்வாகவியல். இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் தங்கள் அசல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ். சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ்களின் நகல் 5 பிரதிகள் நிழற்படம் 5 பிரதிகள் மற்றும் 2 எடுத்து. வரவேண்டும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கை கட்டணம் அன்றே செலுத்த வேண்டும். இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் இனச்சுழற்சி மற்றும் தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் .மேலும் காலை 10.30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கல்லூரி முதல்வர் சாந்தி தெரிவித்துள்ளார்.
- இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றிருக்கிறார்.
- வாகனம் எங்கும் கிடைக்காததை அடுத்து சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே கார்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பூதாமூர் சுடுகாடு அருகே உள்ள மண் பாதையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றிருக்கிறார்.திரும்பி வந்து பார்த்தபோது தனது இரு சக்கர வாகனம் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் தனது மோட்டார் சைக்கிளை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் வாகனம் எங்கும் கிடைக்காததை அடுத்து சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.
- விருத்தாசத்தில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
- சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கடலூர்:
விருத்தாசலம் பங்களா தெரு பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார்.தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் அப்துல் மாலிக் என்பவர் தனது கடையில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டனர்.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து அப்துல் மாலிக்கை கைது செய்தனர். விசாரணையில் இவர் ஏற்கனவே குட்கா விற்பனையில் கைது செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கபட்டது. குட்கா விற்பனையில் 2-வது முறையாக கைது செய்யப்பட்டதால், அவரது கடைக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல்வைத்தனர்.
- சிதம்பரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
கடலூர்:
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பகுதியில் அண்ணாமலை நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட மருத்துவக் கல்லூரி அருகே சந்தேகத்திற்கு இடமாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அக்கிரகாரப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 43) என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- கடலூர் அருகே சொர்ணாவூர் அணைக்கட்டில் மூழ்கி பலியான வாலிபர் உடல் மீட்கப்பட்டது.
- தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சொர்ணாவூர் அணைக்கட்டு உள்ளது. சம்பவத்தன்று இந்த அணைக்கட்டில் புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த உதயகுமரன் (வயது 35) என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் குளித்தார். அப்போது உதயகுமரன் தண்ணீரில் மூழ்கினார். அதிர்ச்சி அடைந்த 4 நண்பர்களும் உதயகுமரனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்திற்கும், வளவனூர் போலீசாருக்கும் தகவல் தெரியப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலையும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது அப்போது அணைக்கட்டு ஓரத்தில் இறந்த நிலையில் உதயகுமரன் உடல் மீட்கப்பட்டது. இந்த உடலை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு வளவனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கிறார்கள்.
- மாவட்ட தலைவர் கைதுக்கு கண்டனம் தெரிவித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சமரசப்படுத்தினர்.
கடலூர்:
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கடலூர் மாவட்ட தலைவர் பயாஸ் அகமதுவை தேசிய குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் காட்டுமன்னார்கோவிலில் கைது செய்தனர். இந்த தகவல் காட்டுமன்னார்கோவில் மற்றும் லால்பேட்டை பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஒன்று திரண்டனர்.
அவர்கள் பயஸ் அகமதுவை கைதுசெய்த அதிகாரிகளை கண்டித்து லால்பேட்டையில் சிதம்பரம் செல்லும் சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விைரந்து சென்று அவர்களை சமரசப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயக் குறைகேட்பு கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளது.
- தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பா ட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை (23- ந்தேதி) புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வு அரங்கத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. எனவே கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டி ற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும்.
கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் காலை 8 மணிமுதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம் இக்குறைகளுக்கு சம்மந்தப் பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை கடலூர் மாவட்ட விவசாயி கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத் துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- சிவரஞ்சனியின் தந்தை பாபு, தாயார் ரூபாவதி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி எல்.என்புரம் எஸ்.பி.ஐ.காலணி நேருநகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சிவரஞ்சனி (வயது 35)இவர் திருப்பூரில் வங்கி ஒன்றில் துணைமேலாளராக பணிபுரிந்து வந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடாஜலபதிபாபு என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று வெங்கடாஜலபதி ராஜியும் அவரது தந்தை கணேசன் ஆகிய இருவரும் குழந்தையை பார்க்க பண்ருட்டிக்கு வந்துள்ளனர்.
அப்போது சிவரஞ்சனியின் தாய்,தந்தையரை அசிங்கமாக திட்டி ஏன் குழந்தையை எங்களிடம் காட்டமாட்டீர்கள் எனக் கேட்டு கையாலும், தடியாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த சிவரஞ்சனியின் தந்தை பாபு, தாயார் ரூபாவதி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார், எஸ்.ஐ. புஷ்பராஜ்மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
- அந்த பணத்தை சில நாட்களுக்கு முன் செந்தில்குமார் பார்த்த போது அது காணாமல் போய் இருந்தது.
- இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது.
கடலூர்:
சிதம்பரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது 36) இவர்களுக்கு திருமணம்,ஆகி9 வயதில் பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் செந்தில்குமார் ரூ.2 லட்சம் பணத்தை தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த பணத்தை சில நாட்களுக்கு முன் செந்தில்குமார் பார்த்த போது அது காணாமல் போய் இருந்தது. அதை சரண்யா எடுத்து புவனகி ரியில் உள்ள ஒரு வங்கியில் தனது பெயரில் வங்கி கணக்கில் செலுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து செந்தி ல்குமார் தனது மனைவி சரண்யாவிடம் கேட்ட போது, இருவருக்கும் இடையில்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது. இதனால் சரண்யா கணவர் செந்தில்குமாரிடம் கோபித்துக் கொண்டு தனது 9 வயது குழந்தையுடன் புவனகிரியில் உள்ள அண்ணன்உத்தண்டி என்பவரது வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து தனது குழந்தையுடன் வெளியே சென்றசரண்யாவை காணவில்லை. இதுகுறித்து அவரதுஅண்ணன் உத்தண்டிபுவனகிரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் சென்ற சரண்யா எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து தேடி வருகி ன்றனர்.
- பண்ருட்டி அருகே வேகாக்கொல்லையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது.
- வேகாக்கொல்லை சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் வேகாக்கொல்லை வருவாய் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவி ல்பாஞ்சாலங்குட்டை உள்ளது. இந்த குட்டையி ல்மழைக்காலங்களில் தண்ணீர்சேமிக்கப்பட்டு பாசன வாய்க்கால்கள் மூலம் இந்த பகுதியில்உள்ள விவசாயநிலங்கள் பாசனம் பெற்று வந்தது. தற்போது இங்கு பெரு மளவில்ஆ க்கிரமிப்புகள் செய்யப்பட்டு இந்த குட்டையில் முந்திரி, கம்பு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த குட்டையில் இருந்த ஆக்கிரமிப்புகளை சென்னை உயர்நீதிமன்ற உத்தரப்படிவருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை ஒத்துழைப்புடன் பொக்லின் எந்திரம் மூலம் அதிரடியாக அகற்றினர் இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்று ம்பணி நடைபெற்று வருகிறது.
தாசில்தார் சிவா.கார்த்தி கேயன், இன்ஸ்பெ க்டர் ராஜதாமரை பாண்டியன், துணை தாசில்தார் செந்தமிழ்செல்வி, வருவாய் ஆய்வாளர் பிரியா லதா, கிராம நிர்வாக அலுவலர் கிராம ராதிகா, நில அளவையர்கள் குணசேகரன், அரிகரன், பஞ்சாயத்து தலைவர்கள் சங்கரி ரவிச்சந்திரன், அஞ்சலை வீரபாண்டியன்ஆகியோர் அந்தப் பகுதியில் முகாமிட்டு ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றி வருகின்றனர் இதனால் வேகாக்கொல்லைசுற்றுவட்டார பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.






