நாளை காலை நடக்கிறது: கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயக் குறைகேட்பு கூட்டம்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயக் குறைகேட்பு கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளது.தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை காலை நடக்கிறது:  கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்  விவசாயக் குறைகேட்பு கூட்டம்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பா ட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை (23- ந்தேதி) புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வு அரங்கத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. எனவே கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டி ற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும்.

கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் காலை 8 மணிமுதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம் இக்குறைகளுக்கு சம்மந்தப் பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை கடலூர் மாவட்ட விவசாயி கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத் துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com