என் மலர்tooltip icon

    கடலூர்

    • பண்ருட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படிநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் ஒரு முறையே பயன்படுத்தும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை வணிக வளாகங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 150 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதோடு கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது துப்புரவு அலுவலர் முருகேசன், துப்புரவு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் துப்புரவு மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார் வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் நகராட்சி பகுதியில் தொடர்ந்து ஆய்வுப் பணி மேற்கொள் ளப்படும் என்று ஆணை யாளர் மகேஸ்வரி அறிவித்தார்.

    • மகேஸ்வரி தனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்புகொள்ள முடியவில்லை.
    • தங்கியிருக்கும் அறைக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பொயனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தேவர் (வயது54) இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக தேவர் துபாய் நாட்டிற்கு சென்றார். அங்கு தனியார் நிறுவனத்தில் லேபராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவரது மனைவி மகேஸ்வரி தனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்புகொள்ள முடியவில்லை.

    இதையடுத்து அவருடைய அறை நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தேவர் வேலைக்கு சென்றவர் 3 நாட்கள் ஆகிறது இன்னும் தங்கியிருக்கும் அறைக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். இதை கேட்டு அதிரச்சியடைந்த தேவர் மனைவி மகேஸ்வரி துபாயில் வேலைக்கு சென்று காணாமல் போன தனது கணவரை மீட்டுதரக்கோரி முதல்- அமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்

    கடலூர் அருகே சொத்தை எழுதி தர தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே தெற்கு ராமபுரம் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 38). இவர் தனது தாய் ருக்குமணியிடம் சொத்தை எழுதி தர கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ருக்குமணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் மகன் கதிர்வேல் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    • கடலூர் அருகே பெண்ணின் கையைபிடித்து இழுத்து வாலிபர் கொலை மிரட்டல் விடுத்தார்.
    • கடலூர் துறைமுகம் போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர், செப்.24-

    கடலூர் அருகே தியாகவல்லியை சேர்ந்தவர் திவ்யபாரதி (வயது 29) . இவரது கணவர் சம்பத்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவர் திவ்யபாரதிக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பாபு நடவடிக்கை சரி இல்லாததால் திவ்யபாரதி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பாபு திவ்யபாரதியை வழிமறித்து ஏன் என்னிடம் பேச மாட்டுகிறாய்? என கேட்டு அடித்து கையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிப்பழக்கத்தால் செல்வராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்ததாக தெரிகிறது.
    • அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் மந்தக்கரை சிவசக்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் கவரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு முன்னதாகவே குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த குடிப்பழக்கத்தால் செல்வராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். மேலும் குடிப்பதற்கு பணம் இல்லாததாலும் குடும்ப பிரச்சினை காரணமாகவும் மன உளைச்சலில் இருந்து வந்த செல்வராஜ் நேற்று வீட்டில் இருந்த கவரிங் நகை தொழிலுக்காக வைக்கப்பட்டிருந்த சைனைடை சாப்பிட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செல்வராஜ் மனைவி காமாட்சி சிதம்பரம் நகர போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடலூர் பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் பணம் திருடப்பட்டது.
    • மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு சேர்ந்தவர் உமா (வயது 55). இவர் நேற்று கடலூர் திருப்பா திரிப்புலியூரில் உள்ள நகைக்கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு செல்வத ற்காக பஸ்நிலையத்திற்கு சென்றார். அப்போது உமா தனது கைப்பையில் 41 ஆயிரம் ரூபாய் வைத்திருந்து பஸ்க்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். பின்னர் தனது ஊருக்கு செல்வ தற்காக பஸ்ஸில் ஏறி அமர்ந்த போது தான் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. இதனால் பதட்டம் அடைந்த உமா உடனடியாகதான் நின்றிருந்தஇடத்தில் சென்று பார்த்தபோது கைப்பை காணவில்லை. மேலும் மர்ம நபர்கள் கைப்பையை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் உமா கொடுத்த புகாரின் பேரில் கைப்பையில் இருந்த 41 ஆயிரம் ரூபாய் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கடலூர் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையத்தில் பட்ட ப்பகலில் பெண், தனது கைப்பையில் வைத்திருந்த 41 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது

    • பண்ருட்டியில் போக்குவரத்து விதி மீறிய 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அனைத்து ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    கடலூர்:

    பண்ருட்டி நகரத்தில் ஆட்டோக்கள் அதிக அளவு செல்கின்றன. ஒருசில ஆட்டோ உரிமையாளர்கள் முறையாக ஆவணம் இன்றி ஒட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் ஆகியோரின் அறிவுரையின் படி பண்ருட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிசந்திரன், போக்குவரத்து ஆய்வாளர் பரமேஸ்வரபத்மநாபன் ஆகியோர் இணைந்து நகரம் முழுவதும் திடீர் ஆய்வு செய்தனர்.

    அதில் எவ்வித ஆவணம் இன்றி ஆட்டோ ஓட்டுதல், உரிமை இல்லாதவை, திருச்சி, கோவை பகுதியிலிருந்து ஆவணமின்றி எடுத்து வந்து பண்ருட்டியில் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 8 ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுபவர்கள், ஆட்டோ முன் பகுதியில் பயணிகளை உட்கார வைத்து ஓட்ட கூடாது. யூனிபார்ம் அணிய வேண்டும். அனைத்து ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    • சம்பவத்தன்று நைசாக மாணவியிடம் பேசி மோட்டார் சைக்கிளில் தனுஷ் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • இது குறித்து வெளியே கூறினால், உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பொதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 21). இவர் பண்ருட்டி பஸ் நிலையம் பகுதியில் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், அரசடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. அடிக்கடி தனுஷ், அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று நைசாக மாணவியிடம் பேசி மோட்டார் சைக்கிளில் தனுஷ் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வெளியே கூறினால், உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

    நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவில், தனது மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தனுசை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் தனுஷ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள்.

    • பள்ளம் தோண்டி குடிநீர் பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • மஞ்சினி மற்றும் வார்டு உறுப்பினர் மலர்விழி ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரிய கங்காணங்குப்பம் ஊராட்சி வார்டு உறுப்பினராக மலர்விழி இருந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் என்பவர் வீட்டின் முன்பு பள்ளம் தோண்டி குடிநீர் பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் எதற்காக இங்கு பள்ளம் தோண்டுகிறீர்கள் ? என கேட்ட போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    இந்த மோதலில் வார்டு உறுப்பினர் மலர்விழி, அவரது கணவர் மஞ்சினி, ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் மஞ்சினி கொடுத்த புகாரின் பேரில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மீதும், ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மஞ்சினி மற்றும் வார்டு உறுப்பினர் மலர்விழி ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சம்பவத்தன்று இரு தரப்பினருக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோதலாக மாறியது.
    • 4 பேர் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு பெரிய நரிமேடு சேர்ந்தவர் இந்திரா (வயது 40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 25). சென்னை ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரு தரப்பினருக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோதலாக மாறியது.

    இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த இந்திரா, அண்ணாதுரை, செல்வி, முத்துராமன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரபாகரன், முத்துராமன், செல்வி, பூமாதேவி ஆகிய 4 பேர் மீதும், செல்வி கொடுத்த புகாரின் பேரில் வைத்தியநாதன், செல்வி, சதீஷ், சித்ரா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே மாமியாருடன் தகராறு செய்த மருமகள் மாயமானார்.
    • பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பண்டரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி ஞானசவுந்தரி (வயது25). இவர் நேற்று முன்தினம் தனது மாமியாருடன் சண்டை போட்டுக் கொண்டு நத்தம் கிராமத்தில் உள்ள தனதுசித்தப்பா வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக தூங்கியவர் அதிகாலை பார்த்த போது திடீரென்று காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை வலை வீசி தேடு வருகிறார்கள்.

    • கடலூர் அருகே உணவுக் கழக ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே குடிகாடு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 68). இந்திய உணவுக் கழக ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் தண்டபாணிக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்தார். சம்பவத்தன்று தண்டபாணி விஷம் குடித்து தனியார் கம்பெனி அருகே மயங்கி கிடந்தார்.

    இவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது தண்டபாணியை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×