என் மலர்tooltip icon

    கடலூர்

    • அதிகாலை அவிநாசி பாலம் அருகே போலீஸ் வாகனம் சென்றது.
    • போலீஸ் வாகனத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 போலீசாரம் படுகாயம் அடைந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்வாளன் மாயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கடலூரில் இருந்து இந்த பாதுகாப்பு பணிக்காக கோவை நோக்கி நேற்று மாலை போலீஸ் வாகனத்தில் சுமார் 16 போலீசார் குழு உடன் சென்றனர். போலீஸ் வாகனத்தை மோகன் (வயது 27) என்பவர் ஓட்டி சென்றார். 

    இன்று அதிகாலை அவிநாசி பாலம் அருகே போலீஸ் வாகனம் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் போலீஸ் வாகனம் முன்பகுதி பலத்த சேதமானது. போலீஸ் வாகனத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 போலீசாரம் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அவிநாசி போலீஸ் டிஎஸ்பி எஸ் பி மற்றும் போலீஸார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த போலீசர்களை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
    • காட்டுமன்னார்கோவில் பகுதியில் தற்போது நெல் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வருகிறார்கள்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று இரவு முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்தது. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் வட்டார பகுதிகளான மாமங்கலம், வானமாதேவி, மா.கொளக்குடி, லால்பேட்டை, மோவூர், ஆயங்குடி, எடையார், கிருஷ்ணாபுரம், சிட்டமல்லி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் மழைநீர் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் அங்கு வசிப்பவர்கள் அவதி பட்டனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில் தற்போது நெல் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வருகிறார்கள். அதோடு நேரடி நெல் விதைப் பிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது பெய்துள்ள மழை நேரடி நெல் விதைப்புக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • முந்திரி விவசாயம் செய்துகொண்டு வரும் தனலட்சுமி தனது மகன் விக்னேஷ் உடன் வீட்டில் இருந்து வருகிறார்.
    • பீரோவில் இருந்த 110 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி தனலட்சுமி(60). சின்னதுரை ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு சுதா, ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகிய 3 மகள்களும், விக்னேஷ்(27) என்ற மகனும் உள்ளனர். சுதா, ராஜலட்சுமி இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் ஜெயலட்சுமி மற்றும் விக்னேஷுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முந்திரி விவசாயம் செய்துகொண்டு வரும் தனலட்சுமி தனது மகன் விக்னேஷ் உடன் வீட்டில் இருந்து வருகிறார். ஜெயலட்சுமி காரைக்காலில் உள்ள தனியார் விவசாய கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த மார்ச் 10- ந் தேதி காலை தனலட்சுமி தனது மகனுடன் தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 110 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற னர். இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை பணத்தை போலீசார் மீட்டு தராததால் வேதனை அடைந்த தனலட்சுமி அவரது மகள் ஜெயலட்சுமி, மகன் விக்னேஷ் ஆகிய 3 பேரும் விருத்தாச்சலம் புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் கடந்த ஜூலையில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்நிலையில் திருடு போன நகையை காவல்துறை இன்னும் மீட்டு தராததால் உடனடியாக மீட்டு தரக்கோரி இன்று காலை புதுக்கூரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் நகையை மீட்க உடனடியாக நடவடிக்கப்படும் உறுதி கூறியதை எடுத்து அவர்கள் சமாதானம் அடைந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வேல்முருகன் அடிக்கடி வேலைக்காக கேரளா மற்றும் வெளிநாடு சென்று விடுவார்.
    • ஆத்திர மடைந்த சங்கீதா பாட்டி என்றும் பாராமல் சிந்தாமணி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தி யாதோப்பு அருகே பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது அக்கா மகளான சங்கீதாவை (வயது 31) கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். வேல்முருகன் அடிக்கடி வேலைக்காக கேரளா மற்றும் வெளிநாடு சென்று விடுவார். இந்நிலையில் கடந்த 1 வருடமாக வீட்டிலேயே உள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்படுவது வழக்கம்.

    சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு சங்கீதா தட்டா னுடை பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சங்கீதாவின் உறவினர் சமாதானம் செய்துவைத்து வேல்முருகனுடன் அனுப்பி வைத்தனர்.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதா தொலை பேசியில் பேசிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த சங்கீதாவின் பாட்டி சிந்தாமணி இதுகுறித்து சங்கீதாவிடம் கேட்டார். இதனால் ஆத்திர மடைந்த சங்கீதா பாட்டி என்றும் பாராமல் சிந்தாமணி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

    இவரது அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிந்தாமணியை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சேத்தியாதோப்பு போலீஸ் டிஎஸ்பி ரூபன் குமார், சப் -இன்ஸ்பெக்டர் பொறுப்பு மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து சங்கீதாவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அண்ணன், தம்பி இருவரும் திடீரென தரை கிணற்றில் தவறி விழுந்தனர்.
    • ஏராளமானோர் திரண்டு வந்து கிணற்றில் விழுந்த 2 சிறுவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி அருகே வடபொன்பரப்பி போலீஸ் சரகம் பிரமகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். அவரது மகன்கள் தமிழ்மாறன் (வயது 10), மோகனபிரியன் (9). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள நர்சரி பள்ளியில் படித்தனர். இவர்கள் இன்று காலை அந்த பகுதியில் உள்ள தரை கிணற்றின் ஓரம் காலை கடன் கழிக்க சென்றனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென 2 பேரும் தரை கிணற்றில் தவறி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் உயிர் பிழைக்க கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

    இதனால் ஏராளமானோர் திரண்டு வந்து கிணற்றில் விழுந்த 2 சிறுவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள். இதுகுறித்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்தனர். அவர்களை கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது 2 சிறுவர்களும் பிணமாக மீட்கப்பட்டனர். இதனை பார்த்ததும் பெற்றோர் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நேரடியாக விசாரணை நடத்தினார்.

    • கடலூர் அருகே மனைவியிடம் கோபித்து சென்ற கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
    • தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    புதுவை மாநிலம் குருவி நத்தம் சேர்ந்தவர் நாகராஜ். (வயது 65). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது சம்பவத்தன்று நாகராஜ் குடிப்பதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். இதற்கு மனைவி தேவகி பணம் தர மறுத்துள்ளார் இதனால் நாகராஜ்  கோபித்துக் கொண்டு அழகிய நத்தம் பகுதியில் இருந்த மோட்டார் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தூக்கணம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பண்ருட்டியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • இவர்களுக்கு 2 மகள் உள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி ராமசாமி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். ஏ.சி. மெக்கானிக். அவரது மனைவி வசந்தி (வயது 32). இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். இந்த நிலையில் வசந்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொைல செய்தார். இதுபற்றி பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரிக்கிறார்கள். 

    • கடலூர் அருகே சாராய விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
    • சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில்சென்று சோதனை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே குள்ளஞ்சாவடி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த நாகம்மாள் (வயது60 ) சாராயம் விற்பனை செய்துவருவதாக தொடர்ந்து புகார் வந்தது.அதன்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது நாகம்மாள் விற்பனைக்கு வைத்து இருந்த சாராயம் கைப்பற்றப்பட்டு அவர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • கழிவு மண் வெட்டி கடத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • எவ்வித அரசு அனுமதியும் பெறாமல் மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை சேர்ந்த வர்கள் வெங்கட்ராமன், செங்கமலம். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் நெடுஞ்சாலைத்துறை பணி முடிந்து காலி செய்த இடத்தில் இருந்த கழிவு மண்ணை எவ்வித அரசு அனுமதியும் பெறாமல் மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றனர்.  தகவல் அறிந்த கடலூர் கனிமவளம் வருவாய் ஆய்வாளர் வேனுநாதன், பண்ருட்டி வட்டாட்சியர் சிவா. கார்த்திகேயன் ஆகியோர் அங்கு விரைந்தனர். அப்போது 2 ஜே.பி.பி. எந்திரங்கள், மற்றும் 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

    • பா.ஜ.க. அலுவலகம் மீதுபெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது.
    • போலீசார் இரவு முழுவதும்அதிரடியாக வாகன சோதனை நடந்து வருகிறது.

    கடலூர்:

    நாடு முழுவதும் பல இடங்களில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அலுவலகம் சோதனை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்ப ட்டனர். இதனைதொடர்ந்து கோவையில் பா.ஜ.க. அலுவலகம் மீதுபெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது. இந்த சம்பவங்களை தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இரவு முழுவதும் அதிரடியாக வாகன சோதனை நடந்து வருகிறது. சென்னையில் இருந்து தஞ்சை செல்லும் வாகனங்கள், புதுவையில் இருந்து பண்ருட்டி வழியாக சேலம் செல்லும் வாகனங்கள், கடலூர் விழுப்புரம் பகுதி யில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.

    இந்த வாகன சோதனை களை பண்ருட்டியில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் கடலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று இரவு ரோந்து பணி மற்றும் வாகன சோதனைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்த குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பத்மநாப பரமேஸ்வரன் மற்றும் போலீசார் உடைந்தனர்.

    • பண்ருட்டி அருகே காதலியின் போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • பண்ருட்டிமகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மேல்பாதி, மாரியம்மன் கோவில் தெருசேர்ந்தவர் சிவனேசன். இவரது மகள்சிம்னி துஷிதா (22) இவர் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் முத்தமிழன் என்பவரை காதலித்து வந்தார். இவரது நடத்தை சரியில்லாமல் தற்போது பிரிந்து விட்டார். இந்தநிலையில் முத்த மிழன் தனியாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதி வேற்றம்செய்துள்ளார் இது பற்றி பண்ருட்டிமகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்துமுத்தமிழனைகைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது.
    • கடற்கரைகள், ஆறுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    வழக்கமாக அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்காதவர்களும், இந்த மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆசி கிடைக்கும் என்பதால் கடற்கரைகள், ஆறுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    அதன்படி புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசைக்கு 14 நாட்களுக்கு முன்பே, மகாளய பட்ச காலமாக இந்துக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகாளய அமாவாசை இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு வந்தனர். பின்னர் கடலில் நீராடி, காய்கறிகள், அரிசி, வெற்றிலை, பாக்கு, பழம், அகத்தி கீரை, எள் போன்ற பொருட்களை வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு வழிபட்டனர்.

    இதேபோல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடலூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றில் குவிந்தனர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடற்கரை மற்றும் ஆறுகளில் தடை செய்யப்பட்ட காரணத்தினால் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், இன்று வழக்கம்போல் அனுமதித்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை மற்றும் ஆறுகள் பகுதியில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் பொதுமக்கள் முன்னோர்கள் தர்ப்பணம் செய்து சென்றனர்.

    ×