என் மலர்
கடலூர்
- வீட்டில் உள்ள அனைத்து பொரு ட்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
- தரைத்தளத்துக்கு கீழே ரகசிய லாக்கர் இருக்குமோ என வீட்டில் தரையையும் சேதப்படுத்தி உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து (வயது45 ). இவர் குடும்பத்தினருடன் 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். மேலும் சிங்கப்பூரில் கன்சல்டிங் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது சொந்த கிராமத்தில் விருதாச்சலம் -திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் மெத்தை வீடு உள்ளது. இந்த வீட்டை வேலையாட்கள் மூலம் பராமரித்து வருகிறார். சிசிடிவி கேமரா மூலம் சிங்கப்பூரிலிருந்து அன்றாட நிகழ்வுகளை பார்ப்பது வழக்கம்.
இந்த நிலையில் அவரது வீட்டில் பின்புறம் சுவற்றில் துளையிட்டு வெளிநாட்டு எலக்ட்ரானிக்ஸ் பொரு ட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள அனைத்து பொரு ட்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.தரைத்தளத்துக்கு கீழே ரகசிய லாக்கர் இருக்குமோ என வீட்டில் தரையையும் சேதப்படுத்தி உள்ளனர். கைரேகை பதியாமல் இருக்க கை உறைகளும் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து பிடிக்காமல் இருக்க சிசிடிவி கேமராவில் பதிவு எந்திரத்தையும் கழட்டி திருடி சென்று விட்டனர்.
அந்த வீட்டில் எவ்வளவு ரூபாய், எவ்வளவு தங்க நகை, திருடு போனது என சிங்கப்பூரில் உள்ள வீட்டின் உரிமையாளர் வந்தால் மட்டுமே தெரியும் இது குறித்து ஆவினன்குடி காவல்துறை , திட்டக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவியா தலைமையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.சம்பவ இடத்தில் காவல்துறையினர் பாது காப்பு பணியில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று தடயவியல் நிபுணர், மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறை வட்டத்தின் தெரிவிக்கப்படுகிறது.
அதிகம் மக்கள் நெருக்கம், மக்கள் நடமாட்டம் உள்ள விருத்தாசலம் -திட்டக்குடி சாலையில் சுவற்றின் துளையிட்டு உள்ளே புகுந்து திருடி இருப்பது கிராம பகுதியில் உள்ளவர்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- முழு அடைப்பு போராட்டம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
- தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததுடன் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி. ஆ. ராசா இந்துக்களை குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்ய கோரியும் புதுவையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பினையொட்டி பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததுடன் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை முதலே பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், மருத்துவமனைகளுக்கு மற்றும் இதர வேலைகளுக்கு செல்வதற்கு ஏராளமானோர் தினந்தோறும் தனியார் பஸ்களில் சென்று வந்தனர். இன்று நடந்த போராட்டத்தை முன்னிட்டு கடலூரில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு தனியார் பஸ்கள் எதுவும் இன்று செல்லவில்லை. அரசு பஸ்கள் மட்டும் இன்று இயங்கின. காலை முதலே ஓரளவு அரசு பஸ்கள் மட்டும் இயங்கி வந்த நிலையில் தனியார் பஸ்கள் எதுவும் இயங்காததால் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கூடுதலாக 10 அரசு பஸ்கள் அதிகாரிகளால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டது. இதனால் பயணிகளின் கூட்டம் அலைமோதாமல் பாதுகாப்பான முறையில் பஸ்களில் பயணம் செய்தனர். மேலும் இந்த அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலூரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரி சென்று வந்தது குறிப்பிடுத்தக்கது. இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.
- சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
- நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு அதிகாரிக ள்நோட்டீஸ்கொடுத்தனர்
கடலூர்:
பண்ருட்டி அருகே திருவாமூரில் கன்னியாகுமரி டூசென்னை சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. என்பவருக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஒன்றரைஏக்கர்நிலம் உள்ளது. இந்த நிலத்சாதை சாலை விரிவாக்க பணிக்காக கையகப்படுத்த உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு அதிகாரிக ள்நோட்டீஸ்கொடுத்தனர். வேண்டுமென்றே சிலரின் தூண்டுதலின் பேரில் எங்களது நிலம் கையகப்படுத்தப்படுகிறது எனக்கூறி மறுப்பு தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையில் அந்தப் பகுதியில் நிலம் கையகப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் சென்றனர். அவர்களை அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நில உரிமையாளர்களுடன் பேச்சி நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டாததால் போலீசார் அங்கு திரண்டு இருந்த விவசாயிகள், பொதுமக்களை விரட்டி அடித்தனர் பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் அங்கு இருந்த மரங்களை வெட்டி சாய்த்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
- என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமாக தீயணைப்புத்துறை மற்றும் பாதுகாப்பு துறை செயல்பட்டு வருகிறது .
- ஒப்பந்த தொழிலாளர்கள் அதே இடத்திலேயே பணி அமர்த்தி வேலை செய்து வந்தனர்.
கடலூர்:
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமாக தீயணைப்புத்துறை மற்றும் பாதுகாப்பு துறை செயல்பட்டு வருகிறது இங்கு என்எல்சி நிரந்தர தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கூடுதலாக என்எல்சி பாதுகாப்பு துறை தனியார் டெண்டர் மூலம் தனியார் ஒப்பந்த பாதுகாப்பு தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டு வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்டு டெண்டர் அடிப்படையில் வருடா வருடம் ஒப்பந்ததாரர்கள் மாற்றப்பட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் அதே இடத்திலேயே பணி அமர்த்தி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் என்எல்சி நிர்வாகம் வருகிற 30-ஆம் தேதியோடு முடிவடையும் டென்டரின் மூலமாக பழைய ஆட்களை வேலையில் இருந்து நிறுத்துவதாக அறிவித்திருப்பதாக தெரிகிறது. இதனால் அங்கு வேலை பார்க்கும் தனியார் ஒப்பந்த பாதுகாப்பு தொழிலாளர்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இன்று 11 வது வட்டம் பாதுகாப்பு தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு நிரந்தரமாக இங்கு வேலை செய்ய அனுமதி அளிக்குமாறும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு வரும் எங்களை வேலையில் இருந்து நீக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அதனால் நெய்வேலியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கமல்நாத் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறான்.
- ஓடிஏறுவதற்காக முயற்சித்தபோது தவறிவிழுந்தான். பஸ் சக்கரம் அவரது வலது தொடையில் ஏறியது.
கடலூர்:
பண்ருட்டி அருகே சின்னசேமக் கோட்டையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் என்பவர் மகன் கமல்நாத் (12). இவர் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக பண்ருட்டி நகராட்சி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தான். அப்போது அரசுபேருந்து வழித்தடம் எண் 8 பி பஸ் வந்தது. அந்த பஸ், பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.
அதில்ஓடிஏறுவதற்காக முயற்சித்தபோது தவறிவிழுந்தான். பஸ் சக்கரம் அவரது வலது தொடையில்ஏறியது.இதனால்படுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரமாண்டமான நவராத்திரி கொலு வைக்கப்பட்டது.
- பிரமாண்டமான கொலுவை திரளான மக்கள் வந்து பார்த்து வணங்கி செல்கின்றனர்.
கடலூர்:
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரமாண்டமான நவராத்திரி கொலு வைக்கப்பட்டது. நடராஜர் கோவிலில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு 30 அடி உயரத்தில் 30 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இந்த கொலு வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. 9 நாட்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பு உள்ள வெள்ளி ஊஞ்சலில் சிவகாமசுந்தரி அம்பாளான, நவராத்திரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறும்.
கொலுவில் நடராஜர் முதல் சிறிய பொம்மைகள் வரை சுமார் 2,500 ஆயிரம் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான கொலுவை திரளான மக்கள் வந்து பார்த்து வணங்கி செல்கின்றனர். நவராத்திரி கொலு குறித்து கோயில் பொதுதீட்சிதர்களில் ஒருவரான வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தது: ஒரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை பரினாம வளர்ச்சிகளை வணங்கும் வன்னம் இந்த கொலு வைத்து வணங்கப்படுகிறது என தெரிவித்தார்.
- சொத்துக்களை, விற்கவோ, அடமானம் வைக்கவோ, தான செட்டில்மெண்ட் எழுதவோ முடியாது என்று அறிவிப்பை வெளியிட்டது.
- இத்தனை ஆண்டுகள் தான் வசிக்கும் இடங்கள் மதிப்பு இழந்து விட்டதையும் கண்ட அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
கடலூர்:
விருத்தாச்சலம் சார் பதிவாளர் அலுவலகம் கடந்த ஜனவரி மாதம் 100-க்கு மேற்பட்ட சர்வே நம்பரில் உள்ள சொத்துக்களை, விற்கவோ, அடமானம் வைக்கவோ, தான செட்டில்மெண்ட் எழுதவோ முடியாது என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அறிவிப்பு செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் தமிழக வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் என்றும், யாரும் உரிமை கோர முடியாது எனவும் அறிவிப்பு வெளியிட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தின் இந்த அறிவிப்பை கண்டு அந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இத்தனை ஆண்டுகள் தான் வசிக்கும் இடங்கள் மதிப்பு இழந்து விட்டதையும் கண்ட அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று விருத்தாச்சலம் பாலக்கரையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என சுமார் 200க்கும் மேற்பட்டோர், வக்பு வாரிய பரிந்துரையை புறக்கணிக்க கோரியும், சட்டப்படி கிரையம் பெற்ற சொத்தின் மீதான பரிவர்த்தனை தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசை கண்டித்தும் கண்டனம் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் அம்பேத்கர், சிவாஜி சிங், ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இன்று காலை சொந்த வேலைக்காக மோட்டார் சைக்கிளில் மேலரதவீதிக்கு வந்தார்.
- கண்இமைக்கும் நேரத்தில் இந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரீயபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வர் ராகுல் (வயது 31). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் இன்று காலை சொந்த வேலைக்காக மோட்டார் சைக்கிளில் மேலரதவீதிக்கு வந்தார். அப்போது அந்த வழி யாக சிதம்பரம் நோக்கி தனியார் சொகுசுபஸ் வந்தது. இந்த பஸ் வடக்கு ரதவீதியாகத்தான் வர வேண்டும் ஆனால் ஒருவழி பாதை உத்தரவை மீறி வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் இந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் என்ஜினீயர் ராகுல் தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தூக்கிக் கொண்டு சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி ரி யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செல்வக்குமார் வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- பீரோவை பார்த்த போது அதில் இருந்த 32 பவுன் நகை கொள்ளை போயிருப்பதை கண்டு செல்வக்குமார் திடுக்கிட்டார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுதொண்டமா தேவி கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். முந்திரி விவசாயி. இவர் நேற்று கீழ்தளத்தில் உள்ள வீட்டு கதவை காற்றுக்காக திறந்து வைத்தார். பின்னர் குடும்பத்துடன் மாடியில் தூங்கினார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை திருடி கொண்டு தலைமறைவானார்கள். இன்று காலை எழுந்து வந்த செல்வக்குமார் வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 32 பவுன் நகை கொள்ளை போயிருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிதுதூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்றனர். அவர்கள் கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்து தீவிரமாக தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
- கிரிஜா என்பவர் கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம், கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்று காலை நடந்த கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.
இன்று காலை வெளிநாடு வாழும் தமிழர் நலச் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் நூருல்லா தலைமையில் வடலூர் பார்வதிபுரம் சேர்ந்த கிரிஜா கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம், கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், எனது தந்தை அன்பு (வயது 54) கடந்த 2017 ஆம் ஆண்டு அரேபியாவில் உள்ள ரியாத்திற்கு வேலைக்கு சென்றார். கடந்த செப்டம்பர் 21- ந் தேதி எனது தந்தை அன்புக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். எனவே தமிழக அரசு இதற்கு தனி கவனம் செலுத்தி இறந்த தந்தை அன்பு உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
- 35 வயது வாலிபர் ஒருவர் ஆற்றில் தண்ணீருக்குள் மூழ்கி கொண்டிருந்ததை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடினார்கள்.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் தென்பெண்ணை ஆற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று காலை 35 வயது வாலிபர் ஒருவர் ஆற்றில் தண்ணீருக்குள் மூழ்கி கொண்டிருந்ததை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சோதனை சாவடி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சிவா தலைமையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடினார்கள்.
அப்போது ஆழமான பகுதியில் வாலிபர் மூழ்கி இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் இறந்த வாலிபர் யார்? என்ன காரணத்திற்காக ஆற்றில் இறங்கினார்? என்பது குறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலை 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர்.
- கடந்த 10 ஆண்டுகளாக திருநங்கைகளாக இருந்து வருகின்றோம். ஆனால் எங்களுக்கு இதுவரை இருப்பிடம் இல்லை. மேலும் வேலை வசதி இல்லாததால் மிகுந்த அவதியடைந்து வருகின்றோம்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்ற வருகின்றது. இன்று காலை 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கடந்த 10 ஆண்டுகளாக திருநங்கைகளாக இருந்து வருகின்றோம். ஆனால் எங்களுக்கு இதுவரை இருப்பிடம் இல்லை. மேலும் வேலை வசதி இல்லாததால் மிகுந்த அவதியடைந்து வருகின்றோம்.
இது மட்டுமின்றி எங்கும் வேலை தர மறுப்பதால் மன உளைச்சலில் இருந்து வருகிறோம். ஆகையால் எங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள். இதனை தொடர்ந்து போலீசார், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்தனர். அதன் பேரில் திருநங்கைகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.






