என் மலர்
கடலூர்
- கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது.
- நிலம் உள்ளவர்கள் அவர்களது நிலத்திலே அடக்கம் செய்து விடுகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி வட்டம் வேகாக்கொல்லை மதுரா பாவைக்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது தந்தை தந்தை வெள்ளக்கண்ணு நேற்று மதியம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இந்த கிராமத்தில் உடல் நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு செல்ல வழி இல்லாத காரணத்தினால் நல்லடக்கம் செய்வதில் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது பற்றி தகவல் வந்ததும் பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல், காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன்,துணை தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் பிரியா லதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் மயானத்திற்கு செல்ல நிரந்தரமான பாதையை அமைத்து தரப்படும் எனஅதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து கைப்பாடை மூலமாகபட்டா நிலத்தின் வழியாக பிணத்தை தூக்கி சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் ஊரில் யாராவது இறந்தால் இது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது. நிலம் உள்ளவர்கள் அவர்களது நிலத்திலே அடக்கம் செய்துவிடு கின்றனர். நிலம், வீடு, வாசல் இல்லாதவர்கள் இறந்தால் அவர்களின் பாடு திண்டாட்டம் ஆகிறது. எனவே நிரந்தர தீர்வுக்கு அரசு உதவ வேண்டும் என்றனர்.
- நெல்லிக்குப்பம் செல்லும் சாலை ஓரமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் செம்மண்டலத்தில் உள்ள நெல்லிக்குப்பம் செல்லும் சாலை ஓரமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புளிய மரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.
- கடந்த பல ஆண்டுகளாக சினிமா துறையில் டைரக்டர் ஆவதற்கு முயற்சி மேற்கொண்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்செருவாய் கிராமம் வெள்ளாற்றில் புதியதாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள புளிய மரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். தகவல்அறிந்த திட்டக்குடி போலீசார் அங்கு சென்றனர்.
உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் வசிக்கும் ராமராஜ் மகன் பாலாஜி (வயது34) என தெரியவந்தது. இவர் கடந்த பல ஆண்டுகளாக சினிமா துறையில் டைரக்டர் ஆவதற்கு முயற்சி மேற்கொண்டதாகவும் இதுவரை அதற்கு தகுந்த வாய்ப்பு கிடைக்காததால் இதில் மன உளைச்சலுக்கு ஆளான பாலாஜி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு ஓய்வு பெற்ற பணம் முறையாக வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும்.
- ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு கடலூர் மண்டலம் சார்பாக அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்
கடலூர்:
ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு ஓய்வு பெற்ற பணம் முறையாக வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும். அனைத்து பிரிவுகளிலும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு கடலூர் மண்டலம் சார்பாக அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மண்டல தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். முருகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. இதில் பாஸ்கரன் ஜான் விக்டர் முத்துக்குமரன் நடராஜன் பழனிவேல் பூங்குன்றன் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறுமிக்கு சிதம்பரம் அருகே உள்ள ஒரு திருமணம் மண்டபம் ஒன்றில் கடந்த 5-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
- சிறுமியின் தந்தை சங்கர் மற்றும் சிறுமியின் தாய் தாமரை செல்வி உள்ளிட்டோர்) 5 பேர் மீது வழக்கு குழந்தை தடுப்பு திருமண சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஆலம்பாடி அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்மேகம் (வயது. 30) இவருக்கு விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சிதம்பரம் அருகே உள்ள ஒரு திருமணம் மண்டபம் ஒன்றில் கடந்த 5-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இது குறித்து கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் மகளிர் ஊர் நல அலுவலர் சுமதி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து (கார்மேகம் தந்தை சுப்பிரமணியன், இவரது மனைவி விஜயகுமாரி சிறுமியின் தந்தை சங்கர் மற்றும் சிறுமியின் தாய் தாமரை செல்வி உள்ளிட்டோர்) 5 பேர் மீது வழக்கு குழந்தை தடுப்பு திருமண சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- அடிப்படை வசதிகள் வழங்க கேட்டு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நீதிமன்றத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் வழங்கி வருகின்றனர்.
கடலூர்:
விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்க கேட்டு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம். விருத்தாசலம் சேலம் ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நீதிமன்றத்திற்கு சரிவர குடிநீர் விநியோகம் வழங்கவில்லை.
இதன் பேரில் பொதுப்பணி துறையிடம் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும் குப்பைகளை சரிவர அகற்றாமல் குப்பை மேடாக காட்சி அளிக்கும் நீதிமன்றத்தை தூய்மைப்படுத்த நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்கள் நீதிம ன்றத்தை புறக்கணித்து நீதிமன்றம் முன்பு பொதுப்பணி துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் நீதிமன்ற வளாகத்திலேயே இருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார சீர்கேடு பிரச்சினையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தது விரு த்தாசலம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பண்ருட்டி வழியாக சென்றது.
- செல்லும்போதே டிராக்டர்சக்கரம் கழன்று ஓடியது.
கடலூர்:
விழுப்புரம்மாவட்டம்திருவெண்ணைநல்லூர்பகுதியில் இருந்து, நேற்று மாலை, நெல்லிக்குப்பம் ஆலைக்கு, டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பண்ருட்டி வழியாக சென்றுகொண்டு இருந்தது டிராக்டரைசுரேஷ் ஓட்டிவந்தார். பண்ருட்டிலிங்க் ரோடு செவன்த் டே பள்ளி முன்பு செல்லும்போது டிராக்டர்சக்கரம்கழன்று ஓடியது. இதனால் பலத்த சத்தத்துடன் டிராக்டர் நடுரோட்டில் முன் பக்கம் சாய்ந்த படி நின்றது. அப்போது அந்த வழியாகவந்தபயணிகள் அலறியடித்து ஓடினர்.
கழன்ற சக்கரம் சிறிது தூரம் ஓடி விழுந்தது. இதனால்அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. டிராக்டரை மிதமான வேகத்தில் ஓட்டியதால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது. அப்போது நடுரோட்டில் டிராக்டர் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துபோக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், போலீசார் பாலாஜி சம்பவத்திற்கு இடத்திற்கு விரைந்து சென்றுவாகனங்களை மாற்று வழியாக திருப்பி விடப்பட்டனர்.பின்பு ஜெசிபி இயந்திரத்தை வரவழைத்து டிராக்டரை அப்புறப்படுத்தினர்.
- இதற்கு முன்பு நெய்வேலி நில எடுப்பு துறை தாசில்தாராக பணிபுரிந்து வந்தார்
- டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கடலூர்:
பண்ருட்டி தாசில்தாராக வெற்றிவெல் புதியதாக பொறுப்பேற்றார். இவர், இதற்கு முன்பு நெய்வேலி நில எடுப்பு துறை தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். புதியதாக பொறுப்பேற்றபின் கடலூர் கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். துணைதாசில்தார்கள் கிருஷ்ணா,சிவக்குமார், சாருலதா,செந்தமிழ்செல்வி, சேகர்,டிஎஸ்ஒமோகன்மற்றும் வருவாய்ஆய்வாளர்கள் கிராமநிர்வாகஅலுவலர்கள் இவருக்கு வாழ்த்து கூறினார். பண்ருட்டி தாசில்தாராக இருந்தசிவா.கார்த்திகேயன் நெய்வேலி நில எடுப்பு தாசில்தாராக மாற்றம்செய்யப்பட்டார்.
- ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மனு அளித்தனர்.
- சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு கருதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
கடலூர்:
இந்திய சுதந்திர தினத்தில் 75-வது ஆண்டு விழா, அம்பேத்கார் நூற்றாண்டு விழா, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டில் அனுமதிகோரி இருந்தனர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மனு அளித்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் திருப்பாதிரிபுலியூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனுவும் பரிசீலனை செய்யப்படும் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கோரியிருந்த ஊர்வலத்துக்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு கருதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து மனு அளித்தவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- ராமதாஸ் அந்த பகுதியில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சிகளில் முக்கிய பொறுப்பாளராக பங்கேற்பது வழக்கம்.
- கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது திடீரென பிரச்சினை ஏற்பட்டது.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் சீனு என்கிற ராமதாஸ் (வயது 52). இந்து முன்னணி நிர்வாகியான இவர் அந்த பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அறங்காவலராக உள்ளார்.
நேற்று இரவு வெளியே சென்று விட்டு தனது மகேந்திரா ஜீப்பினை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அதன் பின்னர் வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை மர்மநபர்கள் அங்கு வந்தனர்.
அக்கம் பக்கம் பார்த்த மர்மநபர்கள் திடீரென ராமதாஸ் வீட்டின் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர். அது தீப்பிளம்பாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த இடமே புகைமண்டலமாக காட்சி அளித்தது. சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிய ராமதாஸ் திடுக்கிட்டு வெளியே வந்தார்.
அப்போது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த தனது ஜீப் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தண்ணீர் ஊற்றி அணைத்தார்.
இதில் ஜீப்பின் டயர் எரிந்து நாசமானது. உடனே அக்கம் பக்கம் சுற்றி பார்த்தபோது 2 பெட்ரோல் குண்டுகள் கிடந்தது. வீட்டின் அருகே உள்ள பனை மரத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகள் கிடந்தது.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீப்போல பரவியது. இதனால் ஏராளமான இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ், பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பெட்ரோல் குண்டின் துகள்களை போலீசார் சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணி நிர்வாகி ராமதாஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது யார்? எதற்காக வீசினர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
ராமதாஸ் அந்த பகுதியில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சிகளில் முக்கிய பொறுப்பாளராக பங்கேற்பது வழக்கம். கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது திடீரென பிரச்சினை ஏற்பட்டது.
அப்போது ராமதாஸ் இதில் தலையிட்டு அந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார். இதன் எதிரொலியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்து முடிந்த 2 நாளில் ராமதாஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து ராமதாஸ் கூறுகையில் கடந்த மாதம் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. நான் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தேன். ஆனால், போலீசார் வழக்கு எதுவும் பதியவில்லை. தற்போது 2 முறையாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை மர்மநபர்கள் வீசி வருகிறார்கள். இதன் எதிரொலியாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டது.
மேலும் இந்து முன்னணி நிர்வாகி வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில் பி.முட்லூரை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி ராமதாஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- போனஸ் தொகையுடன் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.
- குடும்ப கஷ்டங்களை காரணமாக தொடர்ந்து பணம் செலுத்த முடியவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் டி.வி. புத்தூர்பகுதியை சேர்ந்த22 பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2011 ஆம் ஆண்டில் எங்கள் ஊரை சேர்ந்த 4 பேர் தனியார் நிறுவனத்தில் மாதம் 300 வீதம் 70 மாதம் செலுத்தினால் போனஸ் தொகையுடன் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர். அதன் பேரில் மாதம்தோறும் மிக சிரமப்பட்டு பணம் செலுத்தி வந்தோம். ஆனால் குடும்ப கஷ்டங்களை காரணமாக தொடர்ந்து பணம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் நாங்கள் கட்டிய லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மீண்டும் கேட்டால் மேற்படி நபர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். ஆகையால் தனியார் நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு சேர வேண்டிய தொகையை உடனடியாக பெற்று தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குறிஞ்சிப்பாடி புவனகிரி சாலையில் உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் கோவிந்தனை (வயது 52) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






