என் மலர்tooltip icon

    கடலூர்

    • சென்னையில் இருந்து நாகை நோக்கி இன்று காலை அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது.
    • பைபாஸ் சாலையில் தற்போது சாலை பணிகள் நடந்து வருகிறது. இதற்கான துளை போடும் எந்திரம் நிறுத்தப்பட்டு இருந்தது.

    கடலூர்:

    சென்னையில் இருந்து நாகை நோக்கி இன்று காலை அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை குடவாசல் பகுதியை சேர்ந்த டிைரவர் சகாதேவன் ஓட்டினார். இந்த பஸ் சிதம்பரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. பைபாஸ் சாலையில் தற்போது சாலை பணிகள் நடந்து வருகிறது. இதற்கான துளை போடும் எந்திரம் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த எந்திரத்தின் மீது அரசு பஸ் பயங்கரமாக ேமாதியது. இதில் பஸ்சின் முன்பகுதி சிதைந்தது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் சகாதேவன் சம்பவ இடத்தில் பலியானார். பயணிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடம் முக்கிய சாலை ஆகும். இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கியவர்கள் வேதனையால் துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்தனர். அவர்கள் தூக்கி கொண்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து சிதம்பரம் டவுன் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    • ஆற்றில் மீன்பிடிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவுடன் தனித்தனி படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
    • காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே எய்யலூர் கிராமத்திற்கு உட்பட்ட மேல் பாதி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன் (வயது 47). மீன்பிடி தொழிலாளி. சங்கரனின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் 18 வயதில் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவுடன் தனித்தனி படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து மீன் பிடித்து விட்டு ஆறு பேர் வந்துவிட்டனர். இதில் சங்கரன் கரை திரும்பவில்லை. இதனை அறிந்த சங்கரனின் குழந்தைகள் பதறிப் போய் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன்பிடிக்க சென்று நீரில் மாயமான சங்கரனை தேடுபணியில் ஈடுபட்டு வந்தனர். 3-வது நாளான இன்றும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் வருவாய் துறையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிற்சாலையில் உள்ள இரும்பு பொருள்கள் மலைபோல் இங்கு கிடக்கிறது.
    • இரும்பு பொருட்களை பல்வேறு பகுதிகளில் இருந்து மர்ம நபர்கள் ஏராளமானோர் மோட்டார் சைக்கிளில் மினி லாரிகளில் திருடி செல்கின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே பெரியகுப்பம் பகுதியில் எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலை இயங்கி வந்தது. தற்போது இந்த தொழிற்சாலை பல மாதங்களாக எந்தவித பராமரிப்பும் இன்றி கிடப்பில் போடப்பட்டது. அதனால் இந்த தொழிற்சாலையில் உள்ள இரும்பு பொருள்கள் மலைபோல் இங்கு கிடக்கிறது.இந்த இரும்பு பொருட்களை பல்வேறு பகுதிகளில் இருந்து மர்ம நபர்கள் ஏராளமானோர் மோட்டார் சைக்கிளில் மினி லாரிகளில் திருடி செல்கின்றனர்.

    இன்று காலை 11 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள் மற்றும் மினி லாரிகள் எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கு வந்து இரும்பு பொருட்களை திருடிச் செல்வதாக சிதம்பரம் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் புது சத்திரம் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது கையும் களவுமாக 11 பேர் கொண்ட கும்பல் சுத்தி இரும்பு தொழிற்சாலையில் கைவரிசையில் ஈடுபட்ட னர். உடனே போலீசார் 17 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்த னர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கடலூர் மாவட்டம் அக்கரை கோரி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (வயது 50) புனேந்திரன் (38) பச்சான் குப்பம் பகுதியை சேர்ந்த மாறன் சொத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமஜெயம் (52) முருகன் (49) அமரன் (40) வேலு (42) சேகர் (60) அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில் (48) சிவலிங்கம் (45) பூபாலன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்களிடமிருந்து மினி லாரி மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கடைக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஒரு நபர் திடீரென்று பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
    • அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவி அலறினார். பின்னர் தனது தந்தையிடம் தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் கடைக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஒரு நபர் திடீரென்று பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவி அலறினார். பின்னர் தனது தந்தையிடம் தெரிவித்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் ரமேஷ் (வயது 44) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது

    • சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    • அவரை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் :

    நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் யூடியூப் பிரமுகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் கடலூர் மத்திய சிறைக்கு வந்ததாக தெரிகிறது.

    இதனால் அவரை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதித்து சிறை அலுவலகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்க கோரியும் சவுக்கு சங்கர் நேற்று காலை முதல் சிறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    முன்னதாக இதுதொடர்பாக அவர் மனு ஒன்றை சிறை கண்காணிப்பாளரிடம் கொடுத்ததாகவும், அதை அவர் வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    • தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் மெய்யநாதன்.
    • அமைச்சருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கடலூர்:

    ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னைக்கு வருகை தருவதற்காக பயணம் செய்தார். புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஏறிய அமைச்சர் மெய்யநாதனுக்கு பயணத்தின் போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

    சிதம்பரம் ரெயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மெய்யநாதன் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அமைச்சர் சிகிச்சை பெற்று வருவதை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    • பாலிசி மீதான போனஸ் தொகையினை உயர்த்த வேண்டும். கடன் தொகைக்கு வட்டியினை குறைக்க வேண்டும். ஜி.எஸ். டி யை நீக்க வேண்டும்.
    • கடலூர் மஞ்சக்குப்பம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    பாலிசி மீதான போனஸ் தொகையினை உயர்த்த வேண்டும். கடன் தொகைக்கு வட்டியினை குறைக்க வேண்டும். ஜி.எஸ். டி யை நீக்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து எல் .ஐ.சி. நுகர்வோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக அறிவிக்கப்பட்டு இருந்ததது. அதன்படி கடலூர் மஞ்சக்குப்பம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சிவராஜ் தலைமை தாங்கினார்‌. மணிமாறன் வரவேற்றார். கோட்ட பொருளாளர் தாண்டவ கிருஷ்ணன் வாழ்த்துரை ஆற்றினார். இதில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி செல்வராஜ் நெடுஞ்செழியன் ரமேஷ் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் துணைத் தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார் முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
    • திடீரென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் தடை செய்யக்கோரி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஆகையால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். அப்போது திடீரென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து போலீசார் 2 பெண்கள் உட்பட 25 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • அமுதா என்பவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டார்.
    • வீரமணி, பணத்தை விரைவில் தருவதாக உறுதியளித்தார். பின்னர் இருதரப்பினரும் எழுதி கொடுத்து சென்றதின் பேரில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆவினன்குடி பகுதியை சேர்ந்த அமுதா (45)என்பவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தனது மகளுக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வீரமணி என்பவர் 55 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளித்தார். அதன் பேரில் ஆவினன்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது வீரமணி, பணத்தை விரைவில் தருவதாக உறுதியளித்தார். பின்னர் இருதரப்பினரும் எழுதி கொடுத்து சென்றதின் பேரில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

    • மத்திய அரசை சார்ந்த உலக சாதனைக்கான நடுவர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தண்ணீர் விட்டு சோதனை மேற்கொண்டார்.

    கடலூர்:

    வேப்பூர் அருகிலுள்ள நகர், நல்லூர், ஐவதகுடி, ஏ, சித்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை மத்திய அரசை சார்ந்த உலக சாதனைக்கான நடுவர் ஆய்வு மேற்கொண்டார். நகர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, சத்துணவு சமையல் கூடம், நடுநிலை பள்ளியின் புதிய கட்டிடம் உள்ளிட்ட ஆறு இடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை பார்வையிட்ட யஸ்வந்த்சாய் அதில் தண்ணீர் விட்டு சோதனை மேற்கொண்டார்.

    அப்போது நல்லூர் பி.டி.ஒ., சங்கர், ஜெயக்குமாரி, என்ஜினியர்கள் ராஜேந்தி ரன், சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், துணை தலைவர் ராம சாமி, ஊராட்சி செய லாளர் தங்கவேல் உள்ளிட்டோர் உடனிருந்த னர். நல்லூர் ஊராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அமைந்துள்ள வட்டார சேவை மையம், ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை ஆய்வு செய்தார் அப்போது பிடிஒ,இன்ஜினியர்கள் ஆகியோருடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உதயக்குமார், , நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன், ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அரசு பஸ் ஏறி இறங்கியதில் கலை வாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • ரூ .82 லட்சம் வழங்கக்கோரி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது .

    கடலூர்:

    கடலூர் ஆல்பேட்டை கன்னியகோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் மனைவி கலை வாணி ( வயது 37 ). இவர் புதுச்சத்திரம் அருகே தீர்த்தனகிரி அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் செவி லியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 8.11.2015 அன்று வேலை முடிந்து தீர்த்தனகிரியில் இருந்து மேட்டுப்பா ளையம் மெயின்ரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார் . அப்போது பின்னால் வந்த அரசு பஸ் அவர் சென்ற மோட் டார் சைக்கிள் மீது மோதியது . இதில் நிலைதடுமாறி சாலை யில் விழுந்த அவர் மீது அரசு பஸ் ஏறி இறங்கியதில் கலை வாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் இந்த விபத்தில் நஷ்டஈடு கேட்டு மோகன், அவரது மகன்கள் கடலூர் மோட்டார் வாகன விபத்து சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன் , சந்திரசேகரன் மூலம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ .53 லட்சத்து 98 ஆயிரத்து 400 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது . ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதையடுத்து ரூ .82 லட்சம் வழங்கக்கோரி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது . அந்த தொகையும் வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது . அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • அனைத்து வர்த்தக வியாபாரிகளுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
    • பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமான பஸ்கள் இயக்க உத்தரவிடப்படும்.

    கடலூர்:

    புவனகிரி பகுதியில் போக்குவரத்து நெரிச்சலால் மாணவ -மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் சரியாக வாகனத்தை ஓட்டி செல்ல முடியாமலும் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் சமூக ஆர்வலரான கனகராஜ் தலைமையில் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தாங்கள் கூறியது போல் அதன் அடிப்படையில் நாங்கள் அனைத்து வர்த்தக வியாபாரிகளுக்கும் விரைந்து நோட்டீஸ் அனுப்பி வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் அனைத்து வர்த்தக வியாபாரிகளுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதில் கூறியதாவது:-

    அனைத்து வர்த்தக வியாபாரிகளும் அவரவர்கள் கடைக்கு முன்பு செய்துள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக செப்டம்பர் 23 க்குள் பிரித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் செப்டம்பர் 24 ஆம் தேதி நாங்கள் இயந்திரம் மூலம் அகற்றி விடுவோம் அதற்குரிய செலவின தொகையை தங்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இதனால் வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஒரு சிலர் மட்டும் தன்னுடைய கடைகளில் ஆக்கிரம்புகளை அகற்றி உள்ளார். தற்பொழுது வரும் தீபாவளி பண்டிகை தமிழக அரசு பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமான பஸ்கள் இயக்க உத்தரவிடப்படும்.

    இதனை ஒட்டி ஏராளமான போக்குவரத்துகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மூலம் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருவார்கள் ஆகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது பிள்ளைகளை மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு வந்து மளிகை பொருட்கள் புது ஆடைகள் பட்டாசுகள் வாங்குவதற்கு இரு சக்கர வாகனங்களில் வந்து வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல் சாலை ஓரத்தில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை நேரிடும். அந்தப் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தமிழக அரசு அதிரடியாக ஏராளமான ஊர்களில் பெரிய அளவிற்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் கூட இடித்து அப்புறப்படுத்தி வருகிறது. ஆனால் புவனகிரி பகுதியில் மட்டும் ஏன் ஆக்கிரம்புகள் அகற்றப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×