கடலூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

கடைக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஒரு நபர் திடீரென்று பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவி அலறினார். பின்னர் தனது தந்தையிடம் தெரிவித்தார்.
கடலூர் அருகே  9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
Published on

கடலூர்:

கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் கடைக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஒரு நபர் திடீரென்று பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவி அலறினார். பின்னர் தனது தந்தையிடம் தெரிவித்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் ரமேஷ் (வயது 44) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது

X

Maalai Malar
www.maalaimalar.com