திடீர் உடல்நலக் குறைவு - அமைச்சர் மெய்யநாதன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் மெய்யநாதன். அமைச்சருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்
Published on

கடலூர்:

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னைக்கு வருகை தருவதற்காக பயணம் செய்தார். புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஏறிய அமைச்சர் மெய்யநாதனுக்கு பயணத்தின் போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

சிதம்பரம் ரெயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மெய்யநாதன் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் சிகிச்சை பெற்று வருவதை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com