என் மலர்tooltip icon

    கடலூர்

    • பண்ருட்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தில் பொது வழி தனியார் நபர்கள் ஆக்கிரமித்து ஷெட் அமைத்துள்ளனர்.
    • இவ்வழியாக சென்று ஆடு, மாடு பண்ணையில் உள்ள கால்நடைகளுக்கு உணவு அளிக்க முடியாததால் பல கால்நடைகள் உயிரிழந்து உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இன்று காலை ஒரு பெண் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் மக்கள் குறை கேட்பு கூட்ட வளாகத்தில் இருந்த கலெக்டரிடம் மனு அளிக்க சென்றபோது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்து பாட்டிலை எடுத்து குடிக்க முயன்றார். அப்போது அங்கு இருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர் கையில் இருந்த பூச்சி மருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணை நடத்தினர்‌.

    அப்போது பண்ருட்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தில் பொது வழி இருந்து வந்தது‌. இதனை தனியார் நபர்கள் ஆக்கிரமித்து ஷெட் அமைத்துள்ளனர். இதன் காரணமாக அவ்வழியாக சென்று வந்த மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் இவ்வழியாக சென்று ஆடு, மாடு பண்ணையில் உள்ள கால்நடைகளுக்கு உணவு அளிக்க முடியாததால் பல கால்நடைகள் உயிரிழந்து உள்ளது.

    இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது அங்கு இருந்த அதிகாரிகள் இது தொடர்பாக மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கடும் எச்சரிக்கை செய்தனர்.இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடந்த சில ஆண்டுக்கு முன்பு காயத்திரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது தாய் கலையரசி வீட்டில் வசித்து வந்தார்.
    • காயத்திரி 2 மகள்களுடன் வீட்டைவிட்டு வெளியே சென்றார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் காயத்திரி (வயது 28). இவரது கணவர் ராஜா. இவர்களுக்கு கோபியா, தேஜஸ்ஸ்ரீ ஆகிய மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுக்கு முன்பு காயத்திரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது தாய் கலையரசி வீட்டில் வசித்து வந்தார். பின்னர் மகள்களையும் அங்குசெட்டிபாளையத்தில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தார்.நேற்று காயத்திரி 2 மகள்களுடன் வீட்டைவிட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த கலையரசி தனது மகள், பேத்திகளை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்ல

    இதுகுறித்து கலையரசி புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து காயத்திரி என்ன ஆனார், எங்கு சென்றார், கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர்.
    • இன்று காலை முதல் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க வந்ததை காண முடிந்தது.

    கடலூர், அக்.3-

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா நாளை மற்றும் நாளை மறுநாள் வெகு விமர்சையாக கொண்டாடபடுகிறது. இந்த நிலையில் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலையில் அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும்.

    இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்முரமாக விற்பனையாகி வருகின்றன.

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேந்தி பூ தற்போது 100 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 350 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோழிக் கொண்ட பூ 100 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி மற்றும் குண்டு மல்லி 800 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மூக்குத்தி ரோஜா பூ தற்போது 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக இன்று காலை முதல் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க வந்ததை காண முடிந்தது. மேலும் 2 நாட்கள் தொடர்ந்து விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.

    • பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க கோரி தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதம்.
    • சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.

    கடலூர்:

    சமூக வலைதளத்தில் நீதித்துறை குறித்து, அவதூறாக பதிவிட்டது தொடர்பாக யூடியூப் பிரமுகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்ட அவர், பின்னர் நிர்வாக காரணங்களுக்காக கடந்த 16-ந் தேதி கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    அவரை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் கடலூர் மத்திய சிறைக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் பார்வையாளர்கள் சிறையில் சவுக்கு சங்கரை பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதித்து சிறை அலுவலகம் உத்தரவிட்டிருந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்க கோரியும் தொடர்ந்து 3-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறைசாலையில் உள்ள மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • 5 அட்டைப் பெட்டிகளில் சுமார் 98 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் விருத்தாசலம் பெரவலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இனோவா கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.

    அப்போது பின்னால் மற்றொரு ஹோண்டா கார் வந்தது. ஹோண்டா காரை ஓட்டி வந்த டிரைவர் போலீசார் வாகன சோதனை செய்வதை பார்த்தவுடன் வேகமாக தனது காரை திருப்பி வந்த வழியே திரும்பி சென்றார். இதைப் பார்த்த போலீசார் ஹோண்டா காரை பின்னால் துரத்திச் சென்றனர்.

    அப்போது ஹோண்டா காரை ஓட்டி சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் கார் மோதி நின்றது. உடனே போலீசார் காரில் இருந்தவர்களை கையும் களவுமாக பிடித்து சோதனை செய்தனர். இந்த 2 கார்களிலும் சோதனை செய்ததில் 5 அட்டைப் பெட்டிகளில் சுமார் 98 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இதனை கடத்தி வந்தவர்களை கைது செய்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் இவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த முகேஷ் சொரடி (வயது 24) அசாராம் (31) அஜய், உத்தம் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து இவர்கள் குட்காவை பெங்களூரில் இருந்து விருத்தாச்சலம் வழியாக சேலத்திற்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் கூட்டத்தில் கிராம கணக்கு வழக்கு விபரம் குறித்து கேட்டார்.
    • பஞ்சாயத்து துணைதலைவர் வசந்தியின் கணவர் வீரமணிக்கும், ஜெய்சங்கருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் ஊராட்சியில் இன்று காந்தி பிறந்தநாளையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. இதையொட்டி பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் வசந்தி வீரமணி மற்றும் யூனியன் அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதோடு கிராம மக்களும் திரண்டு வந்திருந்தனர்.

    அப்போது பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் கூட்டத்தில் கிராம கணக்கு வழக்கு விபரம் குறித்து கேட்டார். இதனால் பஞ்சாயத்து துணைதலைவர் வசந்தியின் கணவர் வீரமணிக்கும், ஜெய்சங்கருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்து அடிதடியாக மாறியது.

    இந்த மோதலில் வீரமணி தாக்கப்பட்டார். இதனால் அங்கிருந்த கிராம பெண்கள் சிதறி ஓடினார்கள். இதனால் கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. படுகாயம் அடைந்த வீரமணி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பிளாஸ்டிக் தோரணங்கள் புதிய டிசைன்கள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டன.
    • திண்டிவனம் பகுதியில் இருந்து தற்போது பூசணிக்காய் வந்துள்ளன.

    கடலூர்:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா வருகிற 4 5 ஆகிய தேதிகளில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது . இதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பூஜை பொருட்கள் அதிகரித்து விற்பனைக்கு வந்துள்ளது. கடை வீதியில் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூசணிக்காய், பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. மேலும் வர்த்தக நிறுவனங்கள், கடைகளை அழகுப்படுத்த வைக்கப்படும் கலர் பேப்பர்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் புதிய டிசைன்கள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் தற்காலிகமாக உழவர் சந்தை, திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தற்போது பூசணிக்காய் வரத்து வந்துள்ளன. இதில் திண்டிவனம் பகுதியில் இருந்து தற்போது பூசணிக்காய் வந்துள்ளன.

    தற்போது2 டன் பூசணிக்காய் கடலூர் தற்காலிக உழவர் சந்தைக்கு வந்துள்ளது. இதில் ஒரு கிலோ பூசணிக்காய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகின்றன. ஆனால் இந்த ஆண்டு ஆயுத பூஜை விழாயையொட்டி தற்போது 2 டன் பூசணிக்காய் வந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு குறைந்தபட்சம் 10 டன் பூசணிக்காய் வரத்து வந்தது. இதன் காரணமாக விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. மேலும் பொது மக்களும் ஆர்வமுடன் பூசணிக்காய் வாங்கி சென்றனர். இந்த நிலையில் பூசணிக்காய் விளைச்சல் குறைந்த‌ காரணத்தினால் பூசணிக்காய் வரத்து குறைந்துள்ளதால், நாளை முதல் பூசணிக்காய் விற்பனை அதிகமாகும் சமயத்தில் விரைவில் பூசணிக்காய் தீர்ந்துவிடும். மேலும் பூசணிக்காய் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கடலூரில் வீட்டை விட்டு சென்ற பெண் மாயமானார்.
    • ண்ணன் ராஜ்குமார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் புதுகுப்பம் போலீஸ் காலனி பகுதியில் உள்ள பகவந்தர் நகரைச் சேர்ந்தவர் வேணுகோபால். அவரது மகள் உதயமலர் (வயது 34) இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த வேணுகோபால், தனது மகள் உதயமலரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் உதயமலர் கிடைக்கவில்லை. இது குறித்து உதயமலரின் அண்ணன் ராஜ்குமார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உதய மலர் என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை செய்து உதயமலரை தேடி வருகின்றனர்.

    • பண்ருட்டியில் கொய்யாப்பழ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டியில் ரெயில்வே நிலையம் அருகில் புத்து மாரியம்மன் கோயில் உள்ளது. புத்துமாரியம்மன் கோவில் அருகில் 48 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் விஷம் குடித்து இறந்த நிலை கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து இது குறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் இறந்த நபர் திருநெல்வேலி மாவட்டம் சிதம்பராபுரம் பகுதியைச் சேர்ந்த தில்லை குமார் என்பதும். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். தில்லை குமார் பண்ருட்டி பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ெரயிலில் செல்லும் பயணிகளுக்கு கொய்யாப்பழம் விற்பனை செய்து வந்தார் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் தில்லை குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • பூலோக கைலாயம் என அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது.
    • இருள் சூழ்ந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சித்தர்கள் வாழ்ந்த பூமியாகும். பிரசித்தி பெற்ற சன்மார்க்க திருச்சபையை நிறுவிய வள்ளலார் சபையும், திருப்பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோவில், அப்பர் பெருமான் கரையேறிய கரைேயறவிட்ட குப்பம் அப்பர் கோவில், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான திருவந்திபுரம் தேவநா தசுவாமி, பண்ருட்டி திருவதிைக வீரட்டானேஸ்வரர் கோவில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், பூலோக கைலாயம் என அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. எனவேதான் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்குள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். ஆனால், இவ்வாறு பக்தர்கள் வந்து செல்வதால் கடலூர் நகர் பகுதியில் இரவு-பகல் பாராமல் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே தான் கடலூர் மாவட்டம் ஆன்மிக ஸ்தலம் என சிறப்பு பெற்று விளங்கி வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக கடலூர் நகர் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்களின் பிடியில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக கடலூர் வண்டிபாளையத்தில் இருந்து கேப்பர்மலை செல்லும் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது.

    முக்கி யமாக வண்டிப்பா ளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து வண்டிப்பாளையம் செல்லும் பகுதி இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த இடைப்பட்ட தூரத்தில் வழிப்பறி கொள்ளையர்கள் வாகன ஓட்டிகள் வருகைக்காக காத்து நிற்கின்றனர். அவ்வாறு வரும் வாகன ஓட்டிகளை பின்தொடர்ந்து அவர்கள் சட்டைப்பையில் இருந்து செல்போன் மற்றும் பணத்தை அலாக்காக பறித்து சென்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாளுக்குநாள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாளுக்கு நாள் கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. எனவே, இருள் சூழ்ந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். எரியாத மின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் கேட்டபோது, வழிப்பறி கொள்ளை சம்பவம் பற்றி எந்தவித புகாரும் இதுவரை வரவில்லை. அப்படி புகார் வந்தால் கொள்ளையர்களின் கொட்டம் அடக்கப்படும். இருப்பினும் அந்த பகுதியில் இரவு நேர ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும் என்றார்.

    • சவுதி அரேபியாவில் பொறியாளராக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.
    • நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    நெய்வேலி அருகே வடக்குத்து காந்திநகர் வி.கே. சாமி தெருவில் வசித்து வருபவர் அப்துல் கனி அவரது மருமகன் சையது ரஹ்மான் வி.கே.சாமி தெருவில் வசிக்கின்றனர். இவர் சவுதி அரேபியாவில் பொறியாளராக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷாகி நிஷா மற்றும் பேரன் சையது ரியாஸ் ஆகிய இருவரையும் கடந்த 30-ந் தேதி இவரது தந்தை அப்துல் கனி சென்னை விமான நிலையத்திற்கு சென்று சவுதி அரேபியா நாட்டிற்கு விமானம் ஏற்றிவிட்டு வந்ததாகவும் பின்னர் நேற்று காலை தனது மனைவியுடன் தனது மகள் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீட்டின் முன்பக்கம் இருந்த இரும்பு கேட் மற்றும் மர கதவுகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில் கிடந்தது. 

    அதிர்ச்சி அடைந்த அப்துல் கனி வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் உடைத்து திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அப்துல் கனி நெய்வேலி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குடியிருப்பு பகுதியில் வீடு உடைக்கப்பட்டு நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×