என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poison try to drink"

    • பண்ருட்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தில் பொது வழி தனியார் நபர்கள் ஆக்கிரமித்து ஷெட் அமைத்துள்ளனர்.
    • இவ்வழியாக சென்று ஆடு, மாடு பண்ணையில் உள்ள கால்நடைகளுக்கு உணவு அளிக்க முடியாததால் பல கால்நடைகள் உயிரிழந்து உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இன்று காலை ஒரு பெண் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் மக்கள் குறை கேட்பு கூட்ட வளாகத்தில் இருந்த கலெக்டரிடம் மனு அளிக்க சென்றபோது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்து பாட்டிலை எடுத்து குடிக்க முயன்றார். அப்போது அங்கு இருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர் கையில் இருந்த பூச்சி மருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணை நடத்தினர்‌.

    அப்போது பண்ருட்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தில் பொது வழி இருந்து வந்தது‌. இதனை தனியார் நபர்கள் ஆக்கிரமித்து ஷெட் அமைத்துள்ளனர். இதன் காரணமாக அவ்வழியாக சென்று வந்த மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் இவ்வழியாக சென்று ஆடு, மாடு பண்ணையில் உள்ள கால்நடைகளுக்கு உணவு அளிக்க முடியாததால் பல கால்நடைகள் உயிரிழந்து உள்ளது.

    இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது அங்கு இருந்த அதிகாரிகள் இது தொடர்பாக மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கடும் எச்சரிக்கை செய்தனர்.இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×