search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுதபூஜை எதிரொலி:  கடலூருக்கு  விற்பனைக்கு வந்த  பூசணிக்காய் - பூஜை பொருட்கள்
    X

    விற்பனைக்கு வந்த பூசணிக்காய்களை படத்தில் காணலாம். 

    ஆயுதபூஜை எதிரொலி: கடலூருக்கு விற்பனைக்கு வந்த பூசணிக்காய் - பூஜை பொருட்கள்

    • பிளாஸ்டிக் தோரணங்கள் புதிய டிசைன்கள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டன.
    • திண்டிவனம் பகுதியில் இருந்து தற்போது பூசணிக்காய் வந்துள்ளன.

    கடலூர்:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா வருகிற 4 5 ஆகிய தேதிகளில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது . இதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பூஜை பொருட்கள் அதிகரித்து விற்பனைக்கு வந்துள்ளது. கடை வீதியில் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூசணிக்காய், பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. மேலும் வர்த்தக நிறுவனங்கள், கடைகளை அழகுப்படுத்த வைக்கப்படும் கலர் பேப்பர்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் புதிய டிசைன்கள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் தற்காலிகமாக உழவர் சந்தை, திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தற்போது பூசணிக்காய் வரத்து வந்துள்ளன. இதில் திண்டிவனம் பகுதியில் இருந்து தற்போது பூசணிக்காய் வந்துள்ளன.

    தற்போது2 டன் பூசணிக்காய் கடலூர் தற்காலிக உழவர் சந்தைக்கு வந்துள்ளது. இதில் ஒரு கிலோ பூசணிக்காய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகின்றன. ஆனால் இந்த ஆண்டு ஆயுத பூஜை விழாயையொட்டி தற்போது 2 டன் பூசணிக்காய் வந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு குறைந்தபட்சம் 10 டன் பூசணிக்காய் வரத்து வந்தது. இதன் காரணமாக விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. மேலும் பொது மக்களும் ஆர்வமுடன் பூசணிக்காய் வாங்கி சென்றனர். இந்த நிலையில் பூசணிக்காய் விளைச்சல் குறைந்த‌ காரணத்தினால் பூசணிக்காய் வரத்து குறைந்துள்ளதால், நாளை முதல் பூசணிக்காய் விற்பனை அதிகமாகும் சமயத்தில் விரைவில் பூசணிக்காய் தீர்ந்துவிடும். மேலும் பூசணிக்காய் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×