என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் கொய்யாப்பழ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
- பண்ருட்டியில் கொய்யாப்பழ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.
கடலூர்:
பண்ருட்டியில் ரெயில்வே நிலையம் அருகில் புத்து மாரியம்மன் கோயில் உள்ளது. புத்துமாரியம்மன் கோவில் அருகில் 48 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் விஷம் குடித்து இறந்த நிலை கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து இது குறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இறந்த நபர் திருநெல்வேலி மாவட்டம் சிதம்பராபுரம் பகுதியைச் சேர்ந்த தில்லை குமார் என்பதும். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். தில்லை குமார் பண்ருட்டி பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ெரயிலில் செல்லும் பயணிகளுக்கு கொய்யாப்பழம் விற்பனை செய்து வந்தார் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் தில்லை குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.






