பண்ருட்டி அருகே 2 மகள்களுடன் இளம்பெண் திடீர் மாயம்

கடந்த சில ஆண்டுக்கு முன்பு காயத்திரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது தாய் கலையரசி வீட்டில் வசித்து வந்தார். காயத்திரி 2 மகள்களுடன் வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
பண்ருட்டி அருகே 2 மகள்களுடன்   இளம்பெண் திடீர் மாயம்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் காயத்திரி (வயது 28). இவரது கணவர் ராஜா. இவர்களுக்கு கோபியா, தேஜஸ்ஸ்ரீ ஆகிய மகள்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுக்கு முன்பு காயத்திரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது தாய் கலையரசி வீட்டில் வசித்து வந்தார். பின்னர் மகள்களையும் அங்குசெட்டிபாளையத்தில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தார்.நேற்று காயத்திரி 2 மகள்களுடன் வீட்டைவிட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த கலையரசி தனது மகள், பேத்திகளை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்ல

இதுகுறித்து கலையரசி புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து காயத்திரி என்ன ஆனார், எங்கு சென்றார், கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com