என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் சிறையில் சவுக்கு சங்கர் திடீர் உண்ணாவிரத போராட்டம்
- சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- அவரை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் :
நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் யூடியூப் பிரமுகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் கடலூர் மத்திய சிறைக்கு வந்ததாக தெரிகிறது.
இதனால் அவரை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதித்து சிறை அலுவலகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்க கோரியும் சவுக்கு சங்கர் நேற்று காலை முதல் சிறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக இதுதொடர்பாக அவர் மனு ஒன்றை சிறை கண்காணிப்பாளரிடம் கொடுத்ததாகவும், அதை அவர் வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
Next Story






