என் மலர்
நீங்கள் தேடியது "LIC Consumers Associations"
- பாலிசி மீதான போனஸ் தொகையினை உயர்த்த வேண்டும். கடன் தொகைக்கு வட்டியினை குறைக்க வேண்டும். ஜி.எஸ். டி யை நீக்க வேண்டும்.
- கடலூர் மஞ்சக்குப்பம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:
பாலிசி மீதான போனஸ் தொகையினை உயர்த்த வேண்டும். கடன் தொகைக்கு வட்டியினை குறைக்க வேண்டும். ஜி.எஸ். டி யை நீக்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து எல் .ஐ.சி. நுகர்வோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக அறிவிக்கப்பட்டு இருந்ததது. அதன்படி கடலூர் மஞ்சக்குப்பம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சிவராஜ் தலைமை தாங்கினார். மணிமாறன் வரவேற்றார். கோட்ட பொருளாளர் தாண்டவ கிருஷ்ணன் வாழ்த்துரை ஆற்றினார். இதில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி செல்வராஜ் நெடுஞ்செழியன் ரமேஷ் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் துணைத் தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார் முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






