என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தனியார் நிறுவனம் சார்பில் 22 பெண்களிடம் பணம் மோசடி செய்த கும்பல்
  X

  பணம் கட்டி ஏமாந்த பெண்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

  தனியார் நிறுவனம் சார்பில் 22 பெண்களிடம் பணம் மோசடி செய்த கும்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போனஸ் தொகையுடன் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.
  • குடும்ப கஷ்டங்களை காரணமாக தொடர்ந்து பணம் செலுத்த முடியவில்லை.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் டி.வி. புத்தூர்பகுதியை சேர்ந்த22 பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

  கடந்த 2011 ஆம் ஆண்டில் எங்கள் ஊரை சேர்ந்த 4 பேர் தனியார் நிறுவனத்தில் மாதம் 300 வீதம் 70 மாதம் செலுத்தினால் போனஸ் தொகையுடன் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர். அதன் பேரில் மாதம்தோறும் மிக சிரமப்பட்டு பணம் செலுத்தி வந்தோம். ஆனால் குடும்ப கஷ்டங்களை காரணமாக தொடர்ந்து பணம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் நாங்கள் கட்டிய லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மீண்டும் கேட்டால் மேற்படி நபர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். ஆகையால் தனியார் நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு சேர வேண்டிய தொகையை உடனடியாக பெற்று தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×