என் மலர்

  நீங்கள் தேடியது "Contract security workers"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமாக தீயணைப்புத்துறை மற்றும் பாதுகாப்பு துறை செயல்பட்டு வருகிறது .
  • ஒப்பந்த தொழிலாளர்கள் அதே இடத்திலேயே பணி அமர்த்தி வேலை செய்து வந்தனர்.

  கடலூர்:

  நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமாக தீயணைப்புத்துறை மற்றும் பாதுகாப்பு துறை செயல்பட்டு வருகிறது இங்கு என்எல்சி நிரந்தர தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கூடுதலாக என்எல்சி பாதுகாப்பு துறை தனியார் டெண்டர் மூலம் தனியார் ஒப்பந்த பாதுகாப்பு தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டு வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்டு டெண்டர் அடிப்படையில் வருடா வருடம் ஒப்பந்ததாரர்கள் மாற்றப்பட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் அதே இடத்திலேயே பணி அமர்த்தி வேலை செய்து வந்தனர்.

  இந்நிலையில் என்எல்சி நிர்வாகம் வருகிற 30-ஆம் தேதியோடு முடிவடையும் டென்டரின் மூலமாக பழைய ஆட்களை வேலையில் இருந்து நிறுத்துவதாக அறிவித்திருப்பதாக தெரிகிறது. இதனால் அங்கு வேலை பார்க்கும் தனியார் ஒப்பந்த பாதுகாப்பு தொழிலாளர்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இன்று 11 வது வட்டம் பாதுகாப்பு தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு நிரந்தரமாக இங்கு வேலை செய்ய அனுமதி அளிக்குமாறும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு வரும் எங்களை வேலையில் இருந்து நீக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அதனால் நெய்வேலியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  ×