search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே  சுவரில் துளைபோட்டு   வீட்டில் நகை கொள்ளை
    X

    வீட்டு சுவரில் மர்ம நபர்கள் துளை போட்டு உள்ள காட்சி. 

    திட்டக்குடி அருகே சுவரில் துளைபோட்டு வீட்டில் நகை கொள்ளை

    • வீட்டில் உள்ள அனைத்து பொரு ட்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
    • தரைத்தளத்துக்கு கீழே ரகசிய லாக்கர் இருக்குமோ என வீட்டில் தரையையும் சேதப்படுத்தி உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து (வயது45 ). இவர் குடும்பத்தினருடன் 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். மேலும் சிங்கப்பூரில் கன்சல்டிங் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது சொந்த கிராமத்தில் விருதாச்சலம் -திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் மெத்தை வீடு உள்ளது. இந்த வீட்டை வேலையாட்கள் மூலம் பராமரித்து வருகிறார். சிசிடிவி கேமரா மூலம் சிங்கப்பூரிலிருந்து அன்றாட நிகழ்வுகளை பார்ப்பது வழக்கம்.

    இந்த நிலையில் அவரது வீட்டில் பின்புறம் சுவற்றில் துளையிட்டு வெளிநாட்டு எலக்ட்ரானிக்ஸ் பொரு ட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள அனைத்து பொரு ட்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.தரைத்தளத்துக்கு கீழே ரகசிய லாக்கர் இருக்குமோ என வீட்டில் தரையையும் சேதப்படுத்தி உள்ளனர். கைரேகை பதியாமல் இருக்க கை உறைகளும் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து பிடிக்காமல் இருக்க சிசிடிவி கேமராவில் பதிவு எந்திரத்தையும் கழட்டி திருடி சென்று விட்டனர்.

    அந்த வீட்டில் எவ்வளவு ரூபாய், எவ்வளவு தங்க நகை, திருடு போனது என சிங்கப்பூரில் உள்ள வீட்டின் உரிமையாளர் வந்தால் மட்டுமே தெரியும் இது குறித்து ஆவினன்குடி காவல்துறை , திட்டக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவியா தலைமையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.சம்பவ இடத்தில் காவல்துறையினர் பாது காப்பு பணியில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று தடயவியல் நிபுணர், மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறை வட்டத்தின் தெரிவிக்கப்படுகிறது.

    அதிகம் மக்கள் நெருக்கம், மக்கள் நடமாட்டம் உள்ள விருத்தாசலம் -திட்டக்குடி சாலையில் சுவற்றின் துளையிட்டு உள்ளே புகுந்து திருடி இருப்பது கிராம பகுதியில் உள்ளவர்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×