என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் நடந்த போலீஸ்வாகன சோதனையை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அருகில் டிஎஸ்பி சபியுல்லா உள்ளார்.
பண்ருட்டி பகுதியில் விடிய விடிய போலீஸ் ரோந்து பணி: டி.ஐ.ஜி. பாண்டியன் ஆய்வு
- பா.ஜ.க. அலுவலகம் மீதுபெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது.
- போலீசார் இரவு முழுவதும்அதிரடியாக வாகன சோதனை நடந்து வருகிறது.
கடலூர்:
நாடு முழுவதும் பல இடங்களில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அலுவலகம் சோதனை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்ப ட்டனர். இதனைதொடர்ந்து கோவையில் பா.ஜ.க. அலுவலகம் மீதுபெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது. இந்த சம்பவங்களை தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இரவு முழுவதும் அதிரடியாக வாகன சோதனை நடந்து வருகிறது. சென்னையில் இருந்து தஞ்சை செல்லும் வாகனங்கள், புதுவையில் இருந்து பண்ருட்டி வழியாக சேலம் செல்லும் வாகனங்கள், கடலூர் விழுப்புரம் பகுதி யில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த வாகன சோதனை களை பண்ருட்டியில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் கடலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று இரவு ரோந்து பணி மற்றும் வாகன சோதனைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்த குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பத்மநாப பரமேஸ்வரன் மற்றும் போலீசார் உடைந்தனர்.






