என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட சங்கீதா
சேத்தியாதோப்பு அருகே பாட்டி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பேத்தி
- வேல்முருகன் அடிக்கடி வேலைக்காக கேரளா மற்றும் வெளிநாடு சென்று விடுவார்.
- ஆத்திர மடைந்த சங்கீதா பாட்டி என்றும் பாராமல் சிந்தாமணி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தி யாதோப்பு அருகே பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது அக்கா மகளான சங்கீதாவை (வயது 31) கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். வேல்முருகன் அடிக்கடி வேலைக்காக கேரளா மற்றும் வெளிநாடு சென்று விடுவார். இந்நிலையில் கடந்த 1 வருடமாக வீட்டிலேயே உள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்படுவது வழக்கம்.
சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு சங்கீதா தட்டா னுடை பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சங்கீதாவின் உறவினர் சமாதானம் செய்துவைத்து வேல்முருகனுடன் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதா தொலை பேசியில் பேசிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த சங்கீதாவின் பாட்டி சிந்தாமணி இதுகுறித்து சங்கீதாவிடம் கேட்டார். இதனால் ஆத்திர மடைந்த சங்கீதா பாட்டி என்றும் பாராமல் சிந்தாமணி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.
இவரது அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிந்தாமணியை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சேத்தியாதோப்பு போலீஸ் டிஎஸ்பி ரூபன் குமார், சப் -இன்ஸ்பெக்டர் பொறுப்பு மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து சங்கீதாவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






