பண்ருட்டி அருகே காதலியின் போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்த வாலிபர்

பண்ருட்டி அருகே காதலியின் போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பண்ருட்டிமகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
முத்தமிழன்
முத்தமிழன்
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே மேல்பாதி, மாரியம்மன் கோவில் தெருசேர்ந்தவர் சிவனேசன். இவரது மகள்சிம்னி துஷிதா (22) இவர் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் முத்தமிழன் என்பவரை காதலித்து வந்தார். இவரது நடத்தை சரியில்லாமல் தற்போது பிரிந்து விட்டார். இந்தநிலையில் முத்த மிழன் தனியாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதி வேற்றம்செய்துள்ளார் இது பற்றி பண்ருட்டிமகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்துமுத்தமிழனைகைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com