என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துபாயில் காணாமல் போன  கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி மனு
    X

    துபாயில் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி மனு

    • மகேஸ்வரி தனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்புகொள்ள முடியவில்லை.
    • தங்கியிருக்கும் அறைக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பொயனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தேவர் (வயது54) இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக தேவர் துபாய் நாட்டிற்கு சென்றார். அங்கு தனியார் நிறுவனத்தில் லேபராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவரது மனைவி மகேஸ்வரி தனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்புகொள்ள முடியவில்லை.

    இதையடுத்து அவருடைய அறை நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தேவர் வேலைக்கு சென்றவர் 3 நாட்கள் ஆகிறது இன்னும் தங்கியிருக்கும் அறைக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். இதை கேட்டு அதிரச்சியடைந்த தேவர் மனைவி மகேஸ்வரி துபாயில் வேலைக்கு சென்று காணாமல் போன தனது கணவரை மீட்டுதரக்கோரி முதல்- அமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்

    Next Story
    ×