பண்ருட்டி அருகே பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து பாலியல் பலாத்காரம்- பூ வியாபாரி மீது போக்சோ வழக்கு

சம்பவத்தன்று நைசாக மாணவியிடம் பேசி மோட்டார் சைக்கிளில் தனுஷ் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வெளியே கூறினால், உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
பண்ருட்டி அருகே பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து பாலியல் பலாத்காரம்- பூ வியாபாரி மீது போக்சோ வழக்கு
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பொதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 21). இவர் பண்ருட்டி பஸ் நிலையம் பகுதியில் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும், அரசடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. அடிக்கடி தனுஷ், அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

சம்பவத்தன்று நைசாக மாணவியிடம் பேசி மோட்டார் சைக்கிளில் தனுஷ் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வெளியே கூறினால், உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவில், தனது மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தனுசை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீசார் தனுஷ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com