என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே உணவுக் கழக ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
- கடலூர் அருகே உணவுக் கழக ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே குடிகாடு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 68). இந்திய உணவுக் கழக ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் தண்டபாணிக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்தார். சம்பவத்தன்று தண்டபாணி விஷம் குடித்து தனியார் கம்பெனி அருகே மயங்கி கிடந்தார்.
இவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது தண்டபாணியை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






