என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே முன்விரோதத்தில் இரு தரப்பினர் மோதல்: போலீஸ் உள்பட 8 பேர் மீது வழக்கு
- சம்பவத்தன்று இரு தரப்பினருக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோதலாக மாறியது.
- 4 பேர் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு பெரிய நரிமேடு சேர்ந்தவர் இந்திரா (வயது 40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 25). சென்னை ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரு தரப்பினருக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோதலாக மாறியது.
இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த இந்திரா, அண்ணாதுரை, செல்வி, முத்துராமன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரபாகரன், முத்துராமன், செல்வி, பூமாதேவி ஆகிய 4 பேர் மீதும், செல்வி கொடுத்த புகாரின் பேரில் வைத்தியநாதன், செல்வி, சதீஷ், சித்ரா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






