கடலூர் அருகே பெண்ணின் கையைபிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

கடலூர் அருகே பெண்ணின் கையைபிடித்து இழுத்து வாலிபர் கொலை மிரட்டல் விடுத்தார்.கடலூர் துறைமுகம் போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே பெண்ணின் கையைபிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
Published on

கடலூர், செப்.24-

கடலூர் அருகே தியாகவல்லியை சேர்ந்தவர் திவ்யபாரதி (வயது 29) . இவரது கணவர் சம்பத்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவர் திவ்யபாரதிக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பாபு நடவடிக்கை சரி இல்லாததால் திவ்யபாரதி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பாபு திவ்யபாரதியை வழிமறித்து ஏன் என்னிடம் பேச மாட்டுகிறாய்? என கேட்டு அடித்து கையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com