கடலூர் அருகே சொர்ணாவூர் அணைக்கட்டில் மூழ்கி பலியான வாலிபர் உடல் மீட்பு

கடலூர் அருகே சொர்ணாவூர் அணைக்கட்டில் மூழ்கி பலியான வாலிபர் உடல் மீட்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடலூர் அருகே சொர்ணாவூர் அணைக்கட்டில்  மூழ்கி  பலியான வாலிபர் உடல் மீட்பு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சொர்ணாவூர் அணைக்கட்டு உள்ளது. சம்பவத்தன்று இந்த அணைக்கட்டில் புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த உதயகுமரன் (வயது 35) என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் குளித்தார். அப்போது உதயகுமரன் தண்ணீரில் மூழ்கினார். அதிர்ச்சி அடைந்த 4 நண்பர்களும் உதயகுமரனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்திற்கும், வளவனூர் போலீசாருக்கும் தகவல் தெரியப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலையும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது அப்போது அணைக்கட்டு ஓரத்தில் இறந்த நிலையில் உதயகுமரன் உடல் மீட்கப்பட்டது. இந்த உடலை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு வளவனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com