என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திட்டக்குடி அருகே மணல் குவாரி லாரி டிரைவர்கள் சாலை மறியல்
  X

  சாலை மறியல் செய்த லாரி டிரைவர்களை படத்தில் காணலாம்.

  திட்டக்குடி அருகே மணல் குவாரி லாரி டிரைவர்கள் சாலை மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திட்டக்குடி அருகே மணல் குவாரி லாரி டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
  • விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிக்களம் கிராமத்தில் அரியலூர் மாவட்டம் சேந்தமங்கலம் வெள்ளாற்றில் அரசு மணல் குவாரிக்கு மணல் ஏற்ற வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் கடந்த 3 நாட்களாக கொடிக்களம் கிராமத்தில் காத்திருக்கிறார்கள். அரியலூர் மாவட்ட லாரிகளுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்புகை சீட்டு வழங்கி அவர்களின் லாரிகளுக்கு மட்டும் அதிக அளவில் மணல்களை ஏற்றி அனுப்புவதாகவும் இதுவரை 3 நாட்களாக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே தங்களுக்கு மணல் ஏற்ற அனுமதிக்காததை கண்டித்து காத்திருக்கும் லாரி டிரைவர்கள் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் 3 நாட்களாக உணவு உட்கொள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதாகவும் கூறி லாரி டிரைவர்கள் விருத்தாசலம் திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  இதனால் சுமார் ஒரு மணி நேரம் திட்டக்குடி, விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆவினங்குடி போலீசார் மற்றும் திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை செய்து மணல் குவாரி நடத்தும் ஒப்பந்தக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

  Next Story
  ×