திட்டக்குடி அருகே 2 கோவில்களில் துணிகர கொள்ளை

கோவிலில் 3 கலசங்கள், ஒரு செம்பு குடம் தாம்பாள தட்டு உள்ளிட்ட பொருள்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.ஆலயத்தில் உள்ள பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஒயர்களை துண்டித்து விட்டு சென்றுள்ளனர்.
கொள்ளை நடந்த கோவில் பகுதியில் போலீசார் ஆய்வு செய்த காட்சி.
கொள்ளை நடந்த கோவில் பகுதியில் போலீசார் ஆய்வு செய்த காட்சி.
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்துர் கிராமத்தில் ஏரிக்கரையில் தச்சூர் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 கலசங்கள், ஒரு செம்பு குடம் தாம்பாள தட்டு உள்ளிட்ட பொருள்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் இதேபோல் எழுத்தூர் கிராமஊர் அருகே உள்ள அய்யனார் கோயிலில் ஆலயத்தின் முன்பு உள்ள 2 சூலங்கள் பிடுங்கி உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து சுமார் 10,000 பணத்தை திருடி சென்றுள்ளனர்.

அந்த சூலங்களை கோயில் வளாகத்தில் வீசி சென்றுள்ளனர். முன்னதாக ஆலயத்தில் உள்ள பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஒயர்களை துண்டித்து விட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து எழுத்தூர் பகுதியில் உள்ள கோயல்களை திருடர்கள் குறி வைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com