search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Venture robbery"

    • மகேஸ்வரி நேற்று காலை சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேங்கில் பணம் எடுக்க சென்றார்.
    • 62,000 ரொக்கம் பணம், செல்போன் இருந்ததாக முதியவர் கூறினார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 62) இவரது கணவர் அருணாச்சலம் (73). இவர்களுக்கு பிரசாந்த், கவாஸ்கர், என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரி நேற்று காலை சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேங்கில் பணம் எடுக்க சென்றார். பின்னர் பேங்கில் பணம் எடுத்துவிட்டு வீட்டிற்கு சாலையில் நடந்து வந்துள்ளார்.

    அப்போது மகேஸ்வரி மூதாட்டியின் பின்னால் பதிவெண் இல்லா மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மூதாட்டியிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதனையடுத்து மூதாட்டி சத்தம் ேபாட்டுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் பணத்தை திருடிச் சென்றவர்களை பிடிக்க முயன்றனர் ஆனால் மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சென்று விட்டனர். 62,000 ரொக்கம் பணம், செல்போன் இருந்ததாக முதியவர் கூறினார். இதுகுறித்து சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • தனது மகளுடன் ரெட்டியார் பகுதியில் வசித்து வருகிறார்.
    • பீரோ உடைக்கப்பட்டு பதில் இருந்த 5 பவுன் நகை வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் காரை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தன.

    கடலூர்:

    நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சியில் ராமமூர்த்தி ரெட்டியார் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 68) இவர் சப்-இன்ஸ்பெக்டர் ஆக வேலை பார்த்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தனது மகளுடன் ரெட்டியார் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று கடலூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் திருமண விழா முடிந்து வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்த ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பதில் இருந்த 5 பவுன் நகை வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் காரை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தன. இது குறித்து ராதாகிருஷ்ணன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் தெரிவித்தார். புகார் என்பதில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, காரை திருடி சென்ற மர்மகும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். 

    • கோவிலில் 3 கலசங்கள், ஒரு செம்பு குடம் தாம்பாள தட்டு உள்ளிட்ட பொருள்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
    • ஆலயத்தில் உள்ள பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஒயர்களை துண்டித்து விட்டு சென்றுள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்துர் கிராமத்தில் ஏரிக்கரையில் தச்சூர் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 கலசங்கள், ஒரு செம்பு குடம் தாம்பாள தட்டு உள்ளிட்ட பொருள்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் இதேபோல் எழுத்தூர் கிராமஊர் அருகே உள்ள அய்யனார் கோயிலில் ஆலயத்தின் முன்பு உள்ள 2 சூலங்கள் பிடுங்கி உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து சுமார் 10,000 பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    அந்த சூலங்களை கோயில் வளாகத்தில் வீசி சென்றுள்ளனர். முன்னதாக ஆலயத்தில் உள்ள பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஒயர்களை துண்டித்து விட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து எழுத்தூர் பகுதியில் உள்ள கோயல்களை திருடர்கள் குறி வைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு தப்பிய கொள்ளையர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.
    • வீட்டில் இருநத ரூ.36 ஆயிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே தப்பிச்சென்றனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி வசந்தம் நகரில் வசிப்பவர் ராதா (59). இவர் தனது மகள் நிர்மலா மற்றும் பேத்தியுடன் வசித்து வருகிறார்.

    நேற்று நிர்மலா வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பேத்தியும் பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் ராதா மட்டும் தனியாக இருந்தார். இந்தநிலையில் மர்ம நபர்கள் ராதாவின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ராதாவை கட்டிப்போட்டு வாயில் துணியை வைத்து அடைத்தனர். பின்னர் வீட்டில் இருநத ரூ.36 ஆயிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே தப்பிச்சென்றனர்.

    மதியம் பள்ளி முடித்து விட்டு வந்த ராதாவின் பேத்தி வீடு வெளியே பூட்டி இருப்பதையும், ஜன்னல் திறந்து உள்ளதையும் பார்த்தார். ஜன்னல் வழியாக பார்த்தபோது தனது பாட்டி ராதா கைகள் கட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார்.

    அவர்கள் விரைந்து வந்து முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு வீடு முழுவதும் சமையல் கியாஸ் பரவி இருந்தது. கொள்ளையடித்த நபர்கள் ராதாவை கட்டிப்போட்டதுடன், சமையல் கியாஸ் சிலிண்டரையும் திறந்து விட்டுச் சென்றது தெரியவந்தது. உடனடியாக ராதாவை மீட்ட பொதுமக்கள், வீட்டுக்குள் பரவி இருந்த சமையல் கியாசையும் வெளியேற்றினர். சிறு தீப்பொறி பறந்திருந்தால் கூட பெரும் சேதம் நிகழ்ந்து இருக்கும்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×