என் மலர்
நீங்கள் தேடியது "25 pounds of jewellery- cash"
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 47). விவசாயி. இவர் இன்று காலை தனது மனைவியுடன் விளைநிலத்துக்கு சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
வயலில் இருந்து வீடு திரும்பிய நந்தகோபால் வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் கொள்ளை ேபாய் இருந்தது.பதறி போன அவர் இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்ப நாய் வந்தது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.
இதேபோல் குச்சிபாளையத்தில் உள்ள விவசாயி வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது.






