என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காய்ச்சல் பரவலை தடுக்க பள்ளிகளில் புகை மருந்து தெளிப்பு
    X

    காய்ச்சல் பரவலை தடுக்க பள்ளிகளில் புகை மருந்து தெளிப்பு

    • மாணவர்கள் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
    • முதற்கட்டமாக காய்ச்சல் அதிகமாக காணப்படும் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் புகை மருந்து தெளிக்கப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களிடையேயும் இந்த காய்ச்சல் அதிக அளவு பரவி வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    அதேபோல் பள்ளி மாணவர்களிடையே காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், பள்ளிகளில் புகை மருந்து தெளிக்கும் பணி நடைபெறுகிறது. வகுப்பறைகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு புகை மருந்து தெளிக்கப்படுகிறது. மருந்தின் தாக்கம் 10 நிமிடங்கள் வரை இருக்கும் என்பதால், 10 நிமிடங்களுக்கு பிறகே மாணவர்கள் வகுப்பறைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதன்மூலம் மாணவர்களுக்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    முதற்கட்டமாக காய்ச்சல் அதிகமாக காணப்படும் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் புகைமருந்து தெளிக்கப்படுகிறது. அதன்பின்னர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    மேலும் மாணவர்கள் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும், காய்ச்சல் சரியாகும் வரை வீட்டில் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும், வீட்டின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×