search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி மாதம் இன்று தொடங்கியது: கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்காமல் வெறிச்சோடி காணப்பட்டது
    X

    புரட்டாசி மாதம் இன்று முதல் தொடங்கியது. இதனால் கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் உள்ள மீன் விற்பனை செய்யும் இடத்தில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் மீன் விற்பனை மந்தமானது.

    புரட்டாசி மாதம் இன்று தொடங்கியது: கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்காமல் வெறிச்சோடி காணப்பட்டது

    • மீன் மார்க்கெட்களிலும் , சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதி காணப்படும்.
    • அசைவ ஹோட்டல்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த வாடிக்கையாளர்களே இருந்ததை காண முடிந்தது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இதன் காரணமாக புரட்டாசி மாதம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பெருமாள் கோவில்களுக்கு சனிக்கிழமைகளில் செல்வதோடு வீடுகளில் அசைவம் சமைக்காமலும், சாப்பிடாமலும் விரதம் இருப்பது வழக்கமாகும். இது மட்டும் இன்றி புரட்டாசி மாதங்கள் சனிக்கிழமைகளில் நாமம் போட்டு நாராயண கோபால எடுத்து சிறப்பு வழிபாடு செய்வதும் வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக புரட்டாசி மாதம் தொடங்குவதற்கு முன்பு பெரும்பாலான வீடுகளில் தங்களுக்கு தேவையான அசைவ உணவுகளை விரும்பி உண்பார்கள். இதனைத் தொடர்ந்து புரட்டாசி மாதம் தொடங்கியவுடன் தங்கள் விரதமுறையை பொதுமக்கள் கடைப்பிடிப்பார்கள். இந்த நிலையில் இன்று புரட்டாசி மாதம் தொடங்கியது.

    இதன் காரணமாக எப்போதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களிலும் , சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்த நிலையில் இன்று புரட்டாசி தொடங்கியதால் கடலூர் துறைமுகம், மீன் மார்க்கெட்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து கூட்டம் இன்றி காணப்பட்டாலும் சிக்கன், மட்டன் மற்றும் மீன் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இது மட்டும் இன்றி அசைவ ஹோட்டல்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த வாடிக்கையாளர்களே இருந்ததை காண முடிந்தது.

    Next Story
    ×