search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ozone protection"

    • ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • மாணவர்கள் ஒன்றிணைந்து 75 நிமிடத்தில் 75 அடி நீளத்தில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

    உடுமலை :

    உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ஓவியம் வரையும் நிகழ்ச்சி எஸ்.கே.பி., பள்ளியில் நடத்தப்பட்டது.தேஜஸ் ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் சக்கரபாணி தலைமை வகித்தார். முன்னதாக ஆசிரியர் சதீஷ்குமார், வரவேற்றார். மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    ஓசோன் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாணவர்கள் ஒன்றிணைந்து 75 நிமிடத்தில் 75 அடி நீளத்தில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய அறிவியல் அலுவலர் லெனின்தமிழ்க்கோவன், விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.பின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் செய்திருந்தார். அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.முடிவில் என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

    • பசுமை இல்ல வாயுக்களோடு சேர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என்பதை ஆழமாக வலியுறுத்தினர்.
    • பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் போன்ற சிறந்த செய்திகளை எடுத்துரைத்தனர்.

    கடலூர்:

    நெய்வேலி- வடக்குத்தி லுள்ள ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள், ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர்சி . ஆர். ஜெயசங்கர் மற்றும் பள்ளிகளின் இயக்குநர் என். எஸ். தினேஷ் ஆகி யோரின் வழிகாட்டுதலின் பேரில் ஓசோன் படலம் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வையும் , ஓசோனின் நன்மைகளை யும், ஓசோன் படலத்தை நாம் பாதுகாக்காவிட்டால் மக்களாகிய நமக்கு ஏற்படும் தீமைகளையும் தெருக்கூத்து நாடகமாகவும் , வில்லுப்பாட்டு வடிவிலும் நெய்வேலி டவுன்ஷிப்பி லுள்ள கோல்டன் ஜூப்ளி பூங்காவில் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினர்.புறஊதாக் கதிர்களின் தாக்குதல்களிலிருந்து பூமியைக் காப்பாற்றுவ தோடு, மற்ற பசுமை இல்ல வாயுக்களோடு சேர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என்பதை ஆழமாக வலியுறுத்தினர்.

    மேலும்,ஓசோன் வாயுக்கள் அழிக்கப்படும் நிலை உருவானால், பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயர்ந்து, நில பரப்பு அழிந்து, அதிக வெப்பம் காரணமாக வறட்சி அதிகரிக்க ஆரம்பிக்கும். மிகவும் முக்கியமாக ஓசோன் வாயுக்கள் அழிந்தால் மனி தர்களையும், விலங்கு களையும் புற ஊதாக் கதிர்கள் எளிதில் நேரடியாகத் தாக்கும். இதனால் தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலுக்கு பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும். என்பதனை தெருக்கூத்து நாடக வடிவில் மிக அழகாக எடுத்துரைத்தனர். மேலும், வில்லுப்பாட்டின் மூலம், குளுரோ புளுரோ கார்பன் பயன்படுத்துவதை தவிர்த்தாலே நாம் ஓசோன் சேதமடைவதை பாதி நிறுத்தி விடலாம். இதற்கு தடை விதித்த போதிலும், பல நாடுகளில் இன்றும் இதை பயன்படுத்தி க்கொண்டு தான் உள்ளனர். இதை தடுக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மண்ணை சிறிது சிறிதாக செயலிழக்க செய்யும் பிளாஸ்டிக், பாலிதீன் ஆகியவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். என்பன போன்ற சிறந்த செய்திகளை எடுத்துரைத்தனர்.

    இளம் வயதிலேயே ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்களின் இத்தகைய பொதுநல சேவையைச், சுற்றுச்சூழல் மீதான அக்கறையை, நெய்வேலி டவுன்ஷிப்பி லுள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.இதற்கான ஏற்பாடு களைப் பள்ளியின் செயலாளர் சிந்து,பள்ளி முதல்வர்பிந்து, நிர்வாக மேலாளர்ச ரண்யா ,அழகுவேல், நடிப்பு கலை பேராசிரியர் பாலா மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

    ×