search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 houses in ashes"

    • தீ மளமளவென எரிந்ததால் வீட்டிலிருந்த எந்த பொரு ள்களும் எடுக்க முடிய வில்லை.
    • வீடு எரிந்து 2 மணி நேரத்துக்கு பிறகு மின் துறையைச் சார்ந்த ஊழியர் ஒருவர் வந்ததாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த பெருமுளை கிராமத்தில் உள்ள பழைய காலனி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 4 குடிசை வீடுகளில் 5 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கட்டிமுத்து, ராஜவேல், ரங்கசாமி, அஞ்சலை, சக்திவேல் ஆகிய 5 பேரின் கூரை வீடுகள் இன்று காலை மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் 4 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீ மளமளவென எரிந்ததால் வீட்டிலிருந்த எந்த பொரு ள்களும் எடுக்க முடிய வில்லை.

    அதனால் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் விரைந்து வந்து தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவாமல் தீயை அனைத்தனர். இது குறித்து அங்கு வசிக்கும் பொது மக்கள் கூறுகையில், மின் கம்பி அறுந்து கூரை மேல் விழுந்ததால் தீ பிடித்து எரிந்தது. மின் கம்பி அறுந்து விழுந்து வீடு தீப்பற்றி எரிவதாக திட்டக்குடி மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் வீடு எரிந்து 2 மணி நேரத்துக்கு பிறகு மின் துறையைச் சார்ந்த ஊழியர் ஒருவர் வந்ததாக தெரிவித்த னர். அடுத்தடுத்து 4 வீடுகள் தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×