என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
    X

    விருத்தாசலத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

    • விருத்தாசலம் இந்திராநகர் பகுதியில் உள்ள மகாலட்சுமி ராயல்நகரை சேர்ந்தவர் குமார்.
    • கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இந்திராநகர் பகுதியில் உள்ள மகாலட்சுமி ராயல்நகரை சேர்ந்தவர் குமார். லேத்பட்டரை நடத்தி வருகிறார். அவரது மனைவி ஷாகிராபானு. திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பரத் (வயது 14) என்ற மகனும், மேகவர்சனி (12) என்ற மகளும் இருந்தனர்.

    கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்து வந்தனர். நேற்று இரவும் பிரச்சினை வெடித்தது. இதனால் மனமுடைந்த ஷாகிராபானு தற்கொலை செய்வது என முடிவு செய்தார். தான் மட்டும் இறந்தால் குழந்தைகள் வீணாகிவிடுமே என நினைத்த ஷாகிராபானு அவர்களை கொலை செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி இரவு மனதை கல்லாக்கி கொண்டு மகன் பரத், மகள் மேகவர்சனி ஆகியோரை தனித்தனியாக கயிறில் தூக்கில் தொங்க விட்டார். இதில் 2 குழந்தைகளும் துடிக்க துடிக்க இறந்தது. அதன் பின்னர் ஷாகிராபானு மற்றொரு கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    இன்று காலை வீட்டின் அறை கதவு திறக்கப்படாததால் குமார் சந்தேகமடைந்தார். அப்போது ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் அவர் கூச்சல் போட்டார். சத்தம்கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர்.

    தகவல் அறிந்த விருத்தா சலம் போலீசாரும் அங்கு விரைந்தனர். கதவை உடைத்து 3 பேரின் உடலை யும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×