என் மலர்
கடலூர்
- அங்கு தனது இருசக்கர வாகனத்தை மெடிக்கல் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
- சி.சி.டிவி கேமராவில் உள் பதிவுகள் வைத்து விசாரணை நடத்தினர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே தொழுதூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது67). இவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் ராமநத்ததில் உள்ள மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்றார்.பின்னர் அங்கு தனது இருசக்கர வாகனத்தை மெடிக்கல் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பின் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை.
இது குறித்து ராஜேந்திரன் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராவில் உள் பதிவுகள் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் மட்டும் இறங்கி வந்து டிவிஎஸ்.எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தை திருடி செல்கின்றனர். மேலும் திருடி சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
- புல்டோசர் எந்திரம் மூலம் மெகா பள்ளங்களை சரி செய்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி - சென்னை சாலை, பண்ருட்டி -கும்பகோணம் சாலைகுண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால்அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர் லாரி வெங்கடேசன் தனது சொந்த செலவில் டிப்பர் லாரிகளில் ஜல்லி, தார் ஆகியவை எடுத்து வந்து புல்டோசர் எந்திரம் மூலம் மெகா பள்ளங்களை சரி செய்தார். இவரது முயற்சியை பொது மக்கள் பாராட்டினர்
- பண்ருட்டி அருகே பா.ஜ.க. தலைவர் உருவபொம்மையை தி.மு.க.வினர் எரித்தனர்.
- அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
கடலூர்:
கடலூரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதையும், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சரை ஒருமையில் பேசியதை கண்டித்தும் பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டையில் அண்ணாகிராம ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சாம்பசிவம் தலைமையில் தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். உருவ பொம்மை எரிப்பதற்கு அவர்கள் ஊர்வலமாக சென்னை சாலையில் வந்தனர்.
இதையடுத்து அண்ணாமலை உருவ பொம்மையை தி.மு.க.வினர் தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கிருந்த பெண்கள் மற்றும் தி.மு.க.வினர் உருவ பொம்மையை காலணியால் தாக்கி தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- ஒவ்வொரு விளையாட்டுக்கு என்று தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
- கடந்த 3 நாட்களாக கடலூர் நகர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது.
கடலூர்:
கடலூர் நகரின் மையப்ப குதியான மஞ்சக்குப்பத்தில் அண்ணாவிளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுதந்திரதின விழா நடை பெறும்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் தேசியகொடி ஏற்றும் விழா நடந்து வருகிறது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஒவ்வொரு விளையாட்டுக்கு என்று தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடலூர் நகர் பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு பகுதியில் இருந்து விளையாட்டு வீரர்கள் வந்து பயிற்சிபெற்று செல்கி றார்கள். இதுதவிர விளை யாட்டு மைதானத்தை சுற்றி நடைபயிற்சிக்கென்று தனியாக இடம் ஒதுக்க ப்பட்டுள்ளது. இங்கு அதிகாலை முதல் குறிப்பிட்ட நேரம்வரை கடலூரை சேர்ந்தவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கராத்தே, நீச்சல்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளுக்கும் தனித்தனியாக இடம் உள்ளது. இவ்வாறு பல்வேறு வசதி கொண்ட இந்த மைதானம் மழைகாலம் வந்து விட்டால்போதும் குளம்போல் ஆகிவிடுகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெற முடியாமல் அவலநிலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி உள்ளது.
கடந்த 3 நாட்களாக கடலூர் நகர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடி க்கை எடுத்துவருகிறது. ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 8 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் தற்போது குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த மைதானத்துக்குள் யாரும் செல்லமுடியாத அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதுபோன்ற நிலை ஒவ்வொரு மழை க்கும் ஏற்படுகறிது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட உயர் அதி காரிகள் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி தண்ணீர் தேங்க விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நடைபயிற்சி யாளர்கள் கூறுகையில், கடலூர் நகரில் மழை பெய்யும் போதெல்லாம் இதுபோன்ற அவலநிலை நீடிக்கிறது. மைதானத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்த லாம். மைதானத்தில் தண்ணீர் தேங்காத வகை யில் வடிகால் வசதி அமை த்தால் இதுபோன்று தண்ணீர் தேங்காது. எனவே அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற னர்.
- பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதார பயன்பாட்டிற்கு பெரிதும் பயன்படுகிறது.
- விவசாயிகளின் நலனுக்காக வீராணம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம்ம ன்னார்கோவில் லால்பேட்டை அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு விவசாயிகளுக்கும் மற்றும் சென்னை மக்களுக்கு குடிநீர் காட்டிய பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதார பயன்பாட்டிற்கு பெரிதும் பயன்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழையை முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக காட்டுமன்னார்கோவில் மற்றும் ஏரி அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள பொது மக்களின் நலனுக்காக வீராணம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.
வீராணம் ஏரி 47.50 இதன் மொத்த கொள்ளளவு ஆகும். தற்போது தினமும் வீராணம் எரியிலிருந்து சென்னை மக்களின் குடிநீருக்காக 64 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் வீராணம் ஏரியிலிருந்து வடவாறு வழியாக 1897 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இது மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பயன்பா ட்டின் தேவைக்காக சேத்தியா தோப்பு வி. என். எஸ். மதகு வழியாக 431 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தற்போது வீராணம் ஏரி 45.70 கொள்ளளவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக வீராணம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- கடலூர் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் பாதிரிக்கு ப்பத்தை சேர்ந்தவர் ரங்கதாஸ் (வயது 64) இவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்தது. சம்பவத்தன்று தனது வீட்டில் எலி பேஸ்ட் சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்தார். இதனை பார்த்த இவரது உறவினர்கள் ரங்கதாசை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரங்கதாசுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
- கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையம் செல்லும் வழியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிசெல்லும்மாணவ,மாணவியர்களுக்கு இடையூறாக இருந்து வரும் அரசு மதுபான கடையை (டாஸ்மாக்) அகற்றக்கோரி நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் நகர இணை செயலாளர் ராஜி,இளையராஜா,புஷ்பராஜ்,ராஜவேல்,பென்னி,கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புஅழை ப்பாளர்களாக பிரகாஷ்,கலியபெருமாள், அருள்செல்வன் இளஞ்சி றுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர்வெங்கடசாமி, விவசாய அணி மாநில துணைச் செயலாளர்தமிழ்மாறன் நகர பொருளாளர் பக லவன், வாசன்,சந்தானம்,சவுந்தர், சுப்பு ராய லு,ரமேஷ் ,பிரகாஷ் பாலூர்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நேற்று நீலமேகம் உறவினர் சுப நிகழ்ச்சிக்காக தனது காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்று உள்ளார்.
- வீட்டின் வராண்டாவின் முன் பக்கம் உள்ள இரும்பு கேட்டை மட்டும் பூட்டி உள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தெற்கு தெருவில் ஆற்றுப்பாதை ஓரம் வசிப்பவர் நீலமேகம் (வயது58) இவரது மனைவி ஜோதி (56).இவர்கள் வீட்டின் அருகாமையில் பழைய இரும்பு கடை ஒன்று நடத்தி வருகின்றனர்.நேற்று நீலமேகம் உறவினர் சுப நிகழ்ச்சிக்காக தனது காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்று உள்ளார்.கணவர் கார் வரும் என கருதி வீட்டின் வெளிப்பக்கம் உள்ள இரும்புக்கேட்டை பூட்டாமல் மூடிவைத்துள்ளார். மேலும் வீட்டில் உள்பகுதியில் உள்ள கதவு பூட்டாமல் வீட்டின் வராண்டாவின் முன் பக்கம் உள்ள இரும்பு கேட்டை மட்டும் பூட்டி உள்ளார். இரவு 8.30 மணி அளவில் நீலமேகம் கார் வந்த சமயம் கேட்டு திறந்து கிடப்பது கண்டு உள்ளே சென்று ஜோதி பார்த்தபோது பீரோ லாக்கர் அனைத்தும் உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு உள்ளார்.
பீரோவிலிருந்த தோடு 2 பவுன், 2 பவுனில் ஒரு செயின், 3 பவுனில் ஒரு செயின், நெக்லஸ் 6 பவுன் என மொத்தம் 13 பவுன் நகைகள் மற்றும் 70 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த திட்டக்குடி போலீசார் இதுகுறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். கொள்ளை நடந்த தெருவில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒரு வார காலமாக திட்டக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் குறி வைத்து திருடும் கொள்ளையர்ககளால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
- கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீயர் படிக்கும் மாணவி ஒருவரை, இருவரும் காதலித்து வந்தனர்.
- நடுரோட்டில் உருட்டு கட்டை கொண்டு தாக்கி கொண்ட, வீடியோ வெளியானது.
கடலூர்:
விருத்தாசலம் அருகே மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் . அவரது மகன் வருண்குமார் இவரும், கீழப்பாளையூர் கிராமத்தை சேர்ந்த சுதாகரன் என்பவரும், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீ யர் படிக்கும் மாணவி ஒருவரை, இருவரும் காதலித்து வந்தனர். . இவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பதால், 2பேருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று கல்லூரி செல்வதற்காக சுதாகரனும், வருண்குமாரும், கல்லூரி பஸ்சுக்காக கருவேப்பி லங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கல்லூரி மாணவியியை காதலிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சினையால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒரு கட்டத்தில், 2 மாணவர்களும் மற்றும் அவர்கள் சக கல்லூரி மாணவருடன் ஒன்றிணைந்து, ஒருவரு க்கொருவர் உருட்டு கட்டை கொண்டு கொடூரமாக தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்த 6 கல்லூரி மாணவ ர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காவல்துறையினர் இதுபோல் சம்பவத்தில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்து, வழக்கு எதுவும் பதியாமல் வீட்டுக்கு, அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி காதலிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சனையால், கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் உருட்டு கட்டை கொண்டு தாக்கி கொண்ட, வீடியோ வெளியாகி விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இன்று (29-ந்தேதி) தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.
இதன் காரணமாக தென்பெண்ணை ஆறு, கெடிலம், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் சிதம்பரம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதுதவிர கடலூர் மாவட்டத்தில் தொடர்கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை முதல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள். இதுதவிர வீராணம், பெருமாள் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- சூர்யா என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- சபரிராஜன் என்பவரை சூர்யா உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது தங்கை பிறந்தநாளுக்கு சூர்யா என்பவர் தனது நண்பர்களுடன் வாழ்த்து கூற வந்தார். அப்போது சதீஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து எதற்காக வாழ்த்து கூற வந்தீர்கள்? என்று கூறி சூர்யா என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சபரிராஜன் என்பவரை சூர்யா உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசில் சூர்யா கொடுத்த புகாரின் பேரில் சதீஷ் உட்பட 3 பேரும், சபரி ராஜன் கொடுத்த புகாரின் பேரில் சூர்யா உள்ளிட்ட 3 பேர் என மொத்தம் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை நெய்வாசலில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர்.
- லாரி டிரைவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரியலூர் மாவட்டம் இருங்காலங்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், ஒரு பெண் உள்பட 5 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை நெய்வாசலில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர். பின்னர்அவர்கள் நெய் வாசலில் இருந்து கடலூர் செல்லும் சாலையில், திட்டக்குடி அடுத்த கொடிகளம் பஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் வந்து 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபர் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து படுகாயம் அடைந்த மற்றொரு பெண் உட்பட 2 சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸ் டிஎஸ்பி காவியா தலைமையிலான போலீசார் மற்றும் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? மற்றும் இவர்கள் மீது மோதிய லாரி டிரைவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






