search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "theft gang"

    • அரசு பள்ளி ஆசிரியர் முருகையா உள்பட 7 பேரின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
    • ஒரே கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கிராமங்களில் நேற்று ஒரே நாளில் 7 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    ரூ.15 லட்சம் கொள்ளை

    புதுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அந்தோணி (வயது 57), பொன்சிவ ராமச் சந்திரன்(40), ஆலங்குளம் காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் முருகையா(49), அதே பகுதியில் வசிக்கும் லாசர்(39), வீரபுத்திரன்(40), காந்தி நகரில் உள்ள மனோஜ் பிரபாகரன், திருமணி ஆகியோரின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.

    மொத்தம் 7 வீடுகளிலும் கொள்ளை யடிக்கப்பட்ட நகை, ரொக்கப்பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அனைத்து வீட்டு கதவுகளும் ஒரே விதமாக உடைக்கப்பட்டிருந்ததால், ஒரே கும்பல்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க லாம் என போலீசார் கருதுகின்றனர்.

    2 தனிப்படைகள் அமைப்பு

    இதுதொடர்பாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு கும்பலை தேடி வருகின்றனர். இதே காம ராஜ் நகர் பகுதியில் கடந்த மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேர் வீட்டில் ஒரு கும்பல் ரூ. 20 லட்சம் மதிப்பில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.

    அதுகுறித்து இதுவரை துப்பு துலங்காத நிலையில் போலீசாரின் மெத்தன போக்கால் தற்போது 7 வீடு களில் திருட்டு நடந்துள்ள தாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    • அங்கு தனது இருசக்கர வாகனத்தை மெடிக்கல் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
    • சி.சி.டிவி கேமராவில் உள் பதிவுகள் வைத்து விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே தொழுதூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது67). இவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் ராமநத்ததில் உள்ள மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்றார்.பின்னர் அங்கு தனது இருசக்கர வாகனத்தை மெடிக்கல் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பின் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை.

    இது குறித்து ராஜேந்திரன் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராவில் உள் பதிவுகள் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் மட்டும் இறங்கி வந்து டிவிஎஸ்.எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தை திருடி செல்கின்றனர். மேலும் திருடி சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    புதுவையில் கார் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடும் கும்பலை சேர்ந்த ஒருவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலமாக கார் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.

    குறிப்பாக புதுவைக்கு சுற்றுலா வரும் வெளிமாநில கார்களில் கண்ணாடி உடைக்கப்பட்டு பொருட்களை திருடுவது நடந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் எம்.பி. கண்ணன் புதுவையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது அவரது காரின் கண்ணாடியை உடைத்து அவர் வைத்திருந்த பணத்தை திருடி சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன மானேஜர் பிரகாஷ் (வயது 37) என்பவர் உறவினரை பார்க்க காரில் புதுவை வந்தார். அரசு மருத்துவமனை அருகே காரை நிறுத்திவிட்டு உறவினரை பார்க்க சென்றார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து காரை எடுக்க வந்தபோது காரின் அருகே ஒரு வாலிபர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தார். காரின் ஒரு பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அந்த வாலிபரை பிரகாஷ் பிடிக்க முயன்றபோது அவன் தப்பி ஓடிவிட்டான்.

    இதையடுத்து பிரகாஷ் திருடன் திருடன் என கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையின்போது அந்த வாலிபர் காரின் கண்ணாடியை உண்டி வில்லால் உடைத்து காரில் வைத்திருந்த லேப்-டாப்பை திருட முயன்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பெரியக்கடை போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன் ஆகியோர் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் திருச்சி ராஜாஜி நகரை சேர்ந்த பிரசாத் (26) என்பதும், இவருடன் மேலும் 4 பேர் சேர்ந்து புதுவையில் பல்வேறு இடங்களில் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடியதும் புதுவையில் 8 இடங்களிலும், காரைக்காலில் 2 இடங்களிலும் இதுபோல் பொருட்களை திருடி உள்ளனர்.

    இதையடுத்து பிடிபட்ட பிரசாத் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்ற 4 பேரை பிடிக்க பெரியக்கடை போலீசார் திருச்சி விரைந்துள்ளனர்.
    ×