திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிளை திருடும் கும்பல்: கண்காணிப்பு காமிரா காட்சி மூலம் விசாரணை

அங்கு தனது இருசக்கர வாகனத்தை மெடிக்கல் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். சி.சி.டிவி கேமராவில் உள் பதிவுகள் வைத்து விசாரணை நடத்தினர்.
மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் பற்றி கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சியை படத்தில் காணலாம்.
மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் பற்றி கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சியை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

திட்டக்குடி அருகே தொழுதூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது67). இவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் ராமநத்ததில் உள்ள மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்றார்.பின்னர் அங்கு தனது இருசக்கர வாகனத்தை மெடிக்கல் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பின் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை.

இது குறித்து ராஜேந்திரன் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராவில் உள் பதிவுகள் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் மட்டும் இறங்கி வந்து டிவிஎஸ்.எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தை திருடி செல்கின்றனர். மேலும் திருடி சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com